வளிமண்டலத்திற்குள்ளே விடுவிக்கப்படும் போது குளிராக்கி A ஆனது புவியின் ஓசோன் படையைச் சேதப்படுத்துகின்றது. ஒரு புதிய வகைக் குளிராக்கி B இவ்விளைவைக் கொண்டிருப்பதில்லை. புதிய குளிரேற்றியிலும் ஏற்கனவே உள்ள குளிரேற்றியிலும்
A யை B யினால் பிரதியிடும்போது A யினால் ஏற்கனவே வளிமண்டலத்தில் ஏற்படுத்திய சேதம் நீங்கலாக A யினால் ஓசோன் படைக்கு ஏற்படுத்தப்படும் மேலதிக சேதம் எதனையும் தடுக்குமென உற்பத்தியாளர் உரிமை கோருகின்றார். உற்பத்தியாளரின் உரிமைக் கோரிக்கை செம்மையாக இருக்க வேண்டுமெனின், பின்வருவனவற்றில் எது உண்மையாக இருக்க வேண்டும்?