CGT 2009-53

Author : Admin

Topic updated on 08/05/2017 12:18pm

இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்த போதிலும் கௌரவமானதும் உன்னதமானதுமான பாரம்பரியத்தையும் நாகரீகத்தையும் கொண்டுள்ளது. எமது மூதாதையர்கள் பொறியியலில் பெரிய சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். எழுத்துருவில் உள்ளபடி பெரும்பாலான ஆதிவாசிகள் உஷ்ண வலயப் பிரதேசத்திலுள்ள ஒரு தட்டையான மேட்டு நிலத்திலேயே கிராமங்களை அமைத்திருந்தனர். அவர்களின் ஜீவனோபாயம் விவசாயம் என்பதையும் அக்காலத்து புராதன ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். நெல் உற்பத்தி அப்பொழுது மழையையே நம்பியிருந்ததென்றும்இ மழை ஒரு போகத்தில் அபரிமிதமாகவும் இன்னொரு போகத்தில்
பெய்யத் தவறியுமிருந்தது. எனவே நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மழை நீரைத் தேக்கி வைத்து உரிய முறையில் பயன்படுத்த வேண்டிய அவசிய மேற்பட்டது. நாளடைவில் எமது முன்னோர்களால் இயற்கையாகக் கிடைத்த செல்வமாகிய நீர் வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது. தங்களது குளங்களை நிர்மாணிப்பதற்கான தொழில் நுட்பத்தை அபிவிருத்தி செய்து பாரிய நீர்த் தேக்கங்களை உருவாக்குவதற்கு முன்னேறினான். இப்போது மேடுகளிலிருந்து பாயும் நீர்வளங்களை, நதிகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் நீரைப் பாரிய நீர்த் தேக்கங்களில் சேமித்து வைத்தான். அவற்றின் சில சிறிய துறைமுகம் போன்றளவுக்கு பெரிதாக இருந்தன.

மேலுள்ள பந்தியில் குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply