குடியிருப்பாளர்களுக்கும் பணம் வைப்பு, கடன், கொடுப்பனவுச் சேவைகள், காப்புறுதி மற்றும் வியாபார அபிவிருத்திச் சேவைகள் செய்தல் என பல்வேறுபட்ட நிதிச் சேவைகளை ஆற்றுதல் நுண்நிதியம் (micro Finance, MF) என வரையறுக்கலாம். ஏழ்மையை குறைப்பதற்கும். வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்கும், பெண்கள் கல்வி அபிவிருத்திக்கும் நுண்நிதியம் ஒரு வினைத்திறன் மிக்க கருவியாக அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நுண் நிதியத்தை முறைக்கு முறை வந்த அரசாங்கங்களும் அடையாளங்கண்டு தமது திட்டங்களில் உள்ளடக்கியுள்ளனர். பிரதானமாக முன்னைய அரசாங்கம் ‘ஜனசவிய’ என்றும், தற்போதைய அரசாங்கம் ‘சமுர்த்தி’ என்றும், அரசாங்கம் மாத்திரமன்றி பல்வேறு நிறுவனங்களான வங்கிகள், சர்வதேச நன்கொடை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசுசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவை பல தரப்பட்ட நுண்நிதியங்கள் மூலம் நுண் – கடன், வியாபார அபிவிருத்திச் சேவைகள், மற்றும் பயிற்சி போன்ற சேவைகளையும் பொருட்களையும் தந்துதவுகின்றனர்.
பின்வரும் கூற்றுக்களில் மேற்குறிப்பிட்ட பந்தியில் கூறப்பட்ட விடயத்திலிருந்து பெற முடியாதது எது?