சுதந்திரத்திற்குப் பின்னர் இந்நாட்டில் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சியைத் தோற்கடித்த மக்கள் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு விழா 2006 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாகப் பின்வரும் எவ்விடயங்கள் உண்மையானவை?
(A) 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க தலைமை தாங்கிய ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ வெற்றி பெற்றது.
(B) அப்போது திரு டட்லி சேனாநாயக்க பிரதமாராக இருந்தார்.
(C) அப்போது சேர். ஜோன் கொத்தலாவல பிரதமாராக இருந்தார்.
(D) அப்போது இலங்கை குடியரசாக இருக்கவில்லை.
(E) அப்போது ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ பல அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்தது.