இமய மலையில் உள்ள இராச்சியமாகிய நேபாளத்தில் அரச மாளிகையில் நடைபெற்ற கொலைக்குப் பின்னர் ஞானேந்திரா அரசர் 2001 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அரசரானார். 2005 பெப்ரவரியில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து விலக்கி அரசாங்கத்தின் எல்லா அதிகாரங்களையும் அரசர் கையேற்றார். மக்கள் காட்டிய எதிர்ப்புகளின் விளைவாக 2006 ஏப்ரல் மாதத்தில் அரசர் பாராளுமன்றத்திற்கே அதிகாரங்களை மறுபடியும் அளித்தார். நேபாளத்தில்
உள்ள நிலைமை தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களில் எவை உண்மையானவை?
(A) மாவோ புரட்சியாளர்கள் அரசாங்கத்துக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
(B) அண்மையில் நடைபெற்ற உள்@ராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்குக் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்தனர்.
(C) அரசர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றியீட்டியுள்ளார்.
(D) நேபாள நிலைமையில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளது.