அண்மையில் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் பிரதம மந்திரியின் குடும்பத்தினால் ஒரு பெரிய வர்த்தகக் கொடுக்கல் வாங்கல் வரிக் கொடுப்பனவைத் தவிர்ப்பதற்கான சட்ட ரீதியான வழியைப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பொதுமக்கள் தலைநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பிரதமர் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரக் கட்டளையைப் புதுப்பிப்பதற்காக ஒரு பொதுத் தேர்தலை நடத்தினார். எதிர்க் கட்சியினர் இத்தேர்தலைப் பகிஷ்கரித்தனர். முந்திய தேர்தலுடன் ஒப்பிடும் போது பிரதமரின் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டது. இறுதியில் பிரதமர் பதவி விலகினார். இந்நாடு யாது?