கழிவுகளை அகற்றச் சாத்தியமான வழிகளாவன அவற்றை மீள்சுழற்சி செய்தல், புதைத்தல் அல்லது எரித்து விடுதல் ஆகும். நாம் இப்போது செய்வதை விட உயர் அளவு விகிதத்தில் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய எம்மால் முடியும். மனிதர்களாலும் கைத்தொழில்களினாலும் உற்பத்தியாக்கப்படும் குப்பைகளின் அளவு அதிகரித்துச் செல்கிறது. குறைந்தது ஒரு குறுங்காலத்திற்கேனும் இப்போக்கு நிச்சயமாகத் தொடர்ந்து செல்லும். எரிப்பதன் மூலம் கழிவுகளை அழித்து விடுதல் எவ்வளவில் இடம்பெற்றாலும் அதன் மூலம் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் மாறும் இடர் ஏற்படும். கழிவுகளைப் புதைத்து விடுவதற்கான காணி நிரப்பும் இடங்களை சுகாதாரமாகப் பாதுகாப்பதற்கு மில்லியன் கணக்கான மூலதனத்தை ஒதுக்க நாம் தயாராக இல்லாவிட்டால் அது போன்ற இடர் குப்பைகளைப் புகைப்பதாலும் ஏற்படுதல் உண்மையாகும்.
மேல்வரும் பந்தியிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய முடிவு பின்வருவனவற்றுள் எது?