பின்வரும் அட்டவணையில் X நிரலானது தள அமைப்புக்கான முறைகளையும் Y நிரலானது அத்தள அமைப்புக்களுக்கான வரைவிலக்கணத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A. செயன்முறைத் தளஅமைப்பு | 1. ஒத்த தன்மையுடைய பகுதிகள் அல்லது செயன் முறைப் படுத்தலுக்கான தேவைப்பாடுகள் வேலைப் பிரிவுகளில் ஒன்றாக இணைத்து செய்யத்தக்கதாக வசதி செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஒரு முறை |
| B. உற்பத்திப் பொருள் தள அமைப்பு | 2. உற்பத்திப் பணிகள் தனித்தனிப் பிரிவுகளில் கொண்டு நடத்தத்தக்க முறையில் வசதி செய்யப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள ஒரு முறை |
| C. கலத் தளஅமைப்பு | 3. உற்பத்திச் செயற்பாட்டுக்குத் தேவையான மூலப் பொருள், உபகரணங்கள், ஊழியர்கள் உற்பத்தி நடைபெறும் இடத்துக்கு வரத்தக்கதாக வசதி செய்யப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஒரு முறை |
| D. நிலையான இடத் தள அமைப்பு | 4. உற்பத்தி நடைமுறையானது தொடர்ச்சியாக ஒரு பகுதியில் இருந்து ஒருபகுதிக்கு ஒரு வரிசை அடிப்படையில் வேலைப்பிரிவுகளில் காணப்படக்கூடியதாக வசதி செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஒரு முறை |
X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?