பட்டாணித் தாவரங்களில் சிவப்புப் பூ (W) வெள்ளை நிறப் பூ (w) மீது ஆட்சி பெறுவதாகும். பச்சை நிற வித்து (Y) மஞ்சள் நிற வித்து (y) மீது ஆட்சி பெறுவதாகும். சிவப்பு நிறப் பூக்களும் பச்சை நிற வித்துக்களையும் கொண்ட ஒரு தாவரத்தின் பிறப்புரிமையமைப்பைத் துணிவதற்காக அது வெள்ளை நிறப் பூக்களையும் மஞ்சள் நிற வித்துக்களையும் கொண்ட ஒரு தாவரத்துடன் இனக்கலப்புச் செய்யப்பட்டது. பெற்றுக்கொள்ளப்பட்ட தாவரங்கள் பச்சை நிற வித்துக்களுடன் சிவந்த நிறப் பூக்கள், பச்சை நிற வித்துக்களுடன் வெள்ளை நிறப் பூக்கள் என இருவகையான அமைந்தன. பரிசோதிக்கப்பட்ட பெற்றோரின் பிறப்புரிமையமைப்பு பின்வருவனவற்றுள் எதுவாக இருக்கக்கூடும்?