வெள்ளை வியன்டோட்டும் வெள்ளை லெக்கோனும் முழுமையாக வெண் இறக்கைகள் கொண்ட இரு கோழி வருக்கங்கள் ஆகும். இரண்டும் தூயவழி விருத்தியாகும். வெள்ளை லெக்கோன்கள், வெள்ளை வியன்டோட்டுகளுடன் இனங்கலக்கப்படும்போது F1 பறவைகளும் வெண் நிறம் ஆனவை. F1 பறவைகள் உள்ளக விருத்தி செய்யப்படும் போது F2 தோன்றல் வெண் பறவைகளையும் நிறமுள்ள பறவைகளையும் 13 : 3 விகிதசமத்தில் கொண்டுள்ளது. இத்தலைமுறையுரிமை தொடர்பாகப் பின்வரும் முடிபுகளில் தவறானது எது?