வணிகமொன்றின் ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளம் ரூபா 400 000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு வேலை வழங்குநர்களின், ஊழியர்கள் பங்களிப்பு முறையே ரூபா 60 000 ஆகவும் ரூபா 40 000 ஆகவும் காணப்பட்டது. சம்பளம் காசாக உரிய மாதத்தில் செலுத்தப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பானது எதிர்வரும் மாதத்திலே செலுத்தப்படுகிறது. இக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் எம்முறையில் காட்டப்படும்.