பின்வரும் கூற்றுகளில் எவை கம்பனி ஒன்றின் :”மொத்த முற்றும் அடங்கிய வருமானம்” (Total Comprehensive Income) தொடர்பில் சரியானது ?
A – இது வருடத்திற்கான இலாபம், ஏனைய முற்றும் அடங்கிய வருமானம் ஆகிய இரண்டினதும் மொத்தமாகும்.
B – இது குறித்தவொரு காலப்பகுதியினுள் இனங்காணப்பட்ட எல்லா வருமானங்களுக்கும் செலவுகளுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.
C – இது குறித்தவொரு காலப்பகுதியினுள் இனங்காணப்பட்ட எல்லாச் செயற்பாட்டு வருமானங்களுக்கும் மொத்தச் செலவுகளுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.
D – இது குறித்தவொரு காலப்பகுதியினுள் உரிமையாளர்களால், உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகள் நீங்கலாக ஏனைய கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகளால் உரிமையாண்மையில் ஏற்படும் மாற்றம் ஆகும்.