ACC-U11-69

Author : Admin

Topic updated on 05/01/2018 03:26pm

வரையறுத்த நந்தன் பொதுக்கம்பனியின் 31.03.2013 இல் முடிவடையும் வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களிற்கு 31.05.2013 இல் இயக்குனர்களால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. கம்பனியின் வருடாந்தப் பொதுக் கூட்டமானது 15.06.2013 இல் இடம்பெற்றுள்ளது. கம்பனி தொடர்பான பின்வரும் நிகழ்வுகள் 31.03.2013 இற்குப் பின்னர் இடம் பெற்றுள்ளது.
A – 01.04.2013 இலிருந்து 20.04.2013 வரை கொழும்பு பங்குப் பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளின் முதலீடுகளின் சந்தைப் பெறுமதியில் வீழ்ச்சி
B – முக்கிய வாடிக்கையாளர் ஒருவரால் 01.10.2012 இல் கம்பனிக்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கம்பனி பணம் செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி 30.04.2013 இல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு.
C – 31.03.2013 இல் முடிவடையும் வருடத்திற்கான இறுதிப்பங்கிலாபமாக பங்கொன்றிற்கு ரூ. 2 இனை 10.06.2013 இல் பிரகடனப்படுத்தல்.
D – 31.03.2013 இலுள்ள சரக்குகள் அதன் கிரயத்தினை விட குறைவான விலையில் 25.05.2013 இல் விற்பனை செய்யப்பட்டமை.

மேலே காணப்படும் எந்த நிகழ்வுகளை 31.03.2013 இலுள்ள நிதிக் கூற்றுக்களில் சீராக்கம் செய்தல் வேண்டும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply