31.03.2013 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களில் கம்பனியொன்றின் இயக்குநர்கள் 30.06.2013இல் கையொப்பம் இட்டனர். நிதிக் கூற்றுக்கள் 15.07.2013 இல் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டது.
A – 15.06.2013 இல் வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட இருப்புக்களின் சேத இழப்பு 50 000
B – 2012 இல் வேலையை விட்டு நீக்கிய ஊழியர் ஒருவரினால் கம்பனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 26.08.2013 இற்கு முன் 200 000 இழப்பீடு வழங்க வேண்டும் என 26.06.2013 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
C – 2012 இல் 30 000 பெறுமதியான வரவுத் தாள் ஏடுகளில் பதியப்படாதிருந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டது.
D – 31.03.2013 இல் இருப்பாக கணிக்கப்பட்ட 30 000 கிரயமான இருப்பு 15.06.2013 இல் 26 000 வுக்கு விற்கப்பட்டிருந்தது.
மேலுள்ள நிகழ்வுகளில் எவைகளுக்கு 31.03.2013 இல் முடிவடைந்த நிதி வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களில் சீராக்கம் தேவைப்படுகிறது?