வரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களை 31 மே 2015 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 20 யூன் 2015 இல் மீளாய்வு செய்து 25 யூன் 2015 இல் நிதிக்கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் பங்குதாரர்களிற்கு கிடைக்கக் கூடியதாக விடப்பட்டுள்ளதுடன்
பங்குதாரர்கள் 25 யூலை 2015 இல் அவைகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இலங்கை கணக்கீட்டு நியமம் 10 இன் படி வரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் அறிக்கையிடும் தினத்திற்குப் பின்னர்
இடம்பெறும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்குப் பிரயோகிக்கக்கூடிய கால எல்லை எது?