முடிவடைந்த வருடத்திற்கான கமல், விமல், சமல் பங்குடைமை வணிகத்தின் தகவல்களின் சில வருமாறு
A – கமலின் வருடாந்த சம்பளம் ரூபா 30 000
B – குறித்த வருடத்தில் கமலுக்கு காசாக செலுத்திய சம்பளம் ரூபா 18 000
C – கமல், விமல், சமல் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா 50 000, ரூபா 50 000, ரூபா 25 000
D – விமல், சமல் என்போரின் பொருள் பற்று முறையே ரூபா 10 000, ரூபா 5 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை.
E – விமலுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா 25 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
2015.03.31 ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்தின் சரியான தேறியலாபம் யாது?