சுதன், ஜேக்கப், றொகுல்சன் ஆகியோர் முறையே 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்வு செய்யும் பங்குடைமையில் ஈடுபடுகின்றனர். 2014 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் தயார் செய்யப்பட்ட பின்னர் நடைமுறைக் கணக்கு மீதிகள் பின்வருமாறு காணப்பட்டது.
சுதன் 125 000 (செலவு), ஜேக்கப் 130 000 (செலவு), றொகுல்சன் 120 000 (வரவு) மேற்படி நிதிக்கூற்று தயார் செய்யும் போது ரூ. 120 000 பெறுமானத் தேய்வும் ரூ. 180 000 கடன் விற்பனையும் பதிவு செய்யப்படவில்லை. மேற்படி சீராக்கம் செய்த பின் சரியான நடைமுறை கணக்கு மீதி யாது?