“திருவள்ளுவர்” வாசிகசாலை சங்கத்தின் 31.03.2014 இல் ஆயுள் அங்கத்துவச் சந்தாக் கணக்கு மீதி ரூபா 150 000 ஆகும். இதில் 10% வருடாந்த அங்கத்தவர் சந்தாக் கட்டணமாக வருமானத்துடன் சேர்க்கப்படும். வருட அங்கத்துவக் கட்டணம் ரூபா 500 ஆக இருப்பதுடன் 2015.03.31 ல் ஆயுள் அங்கத்தவர் தவிர்ந்த அங்கத்தவர் எண்ணிக்கை 200 ஆகும். 2014.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 20 பேரும் எதிர்வரும் வருடத்துக்கான அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்திய அங்கத்தவர்கள் 25 பேரும் இருந்தனர். 2015.03.31 இல் அங்கத்துவக் கட்டணம் செலுத்தாத அங்கத்தவர்கள் 30 பேரும், எதிர்வரும் வருடத்துக்காக அங்கத்துவ கட்டணம் செலுத்திய அங்கத்தவர் 20 பேரும் இருந்தனர்.
2015.03.31 இல் முடிவடைந்த வருடத்துக்கான அங்கத்துவக் கட்டண வருமானம்