ACC-U08-03

Author : Admin

Topic updated on 04/19/2018 02:56pm

சக்தி விளையாட்டுக் கழகத்தின் 2016.03.31 இல் அங்கத்தவர் எண்ணிக்கை 150 ஆகும். இதில் 50 பேர் ஆயுட்கால அங்கத்தவர்களாவர். எஞ்சிய அங்கத்தவரொருவரின் வருடாந்த அங்கத்துவக் கட்டணம் ரூபா 1 000 ஆகும். 12 அங்கத்தவர்கள் 2015/16 வருடத்திற்கான அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. 8 அங்கத்தவர்கள் 2016/17 ஆண்டிற்கான அங்கத்துவப் பணத்தையும் செலுத்தி இருந்தனர். ஆயுட்கால அங்கத்துவக் கட்டணக் கணக்கின் 2015/04/01 இல் மீதி ரூபா 200 000 ஆகும். இதில் 10% மான தொகை 2015/16 ம் வருடத்தில் அங்கத்துவக் கட்டண வருமானமாக
வருமான செலவுக் கணக்கிற்கு மாற்றப்படும். வருட ஆரம்பத்தில் நிலுவை அல்லது முற்பண அங்கத்துவக் கட்டணம் எதுவுமில்லை.
2015/16 ஆம் வருடத்தில் வருமானமாக இனங்காணவேண்டிய அங்கத்துவக் கட்டணப் பெறுமதியும்/ வருடத்தினுள் கிடைக்கப்பெற்ற அங்கத்துவக் கட்டணமும் எவ்வளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply