மோட்டார் வாகன வியாபாரக் கம்பனியொன்று பாவனை செய்யப்பட்ட கார் ஒன்றினை 2010 மே 30 இல் ரூ. 1 300 000 இற்கு வாங்கியதுடன் தரகருக்கு தரகாக ரூ. 20 000 ஐ செலுத்தியது. இறக்குமதி வரியின் திடீர் குறைப்பின் காரணமாக 2010 யூன் 30 இல் இக்காரின் சந்தைப் பெறுமதி ரூ. 800 000 என மதிப்பீடு செய்யப்பட்டது. இத் திகதியில் இக்காரின் மதிப்பிடப்பட்ட விற்பனை தரகு ரூ. 30 000.
2010 யூன் 30 இல் முறையே இக்காரின் கிரயமும் தேறிய தேறக்கூடிய பெறுமதியும் என்ன?