இயந்திரங்களை விற்பனை செய்யும் கம்பனியொன்று ரூ. 1 800 000 கிரயத்தைக் கொண்டிருந்த இயந்திரமொன்றை 2010 மார்ச் 01 இல் ரூ. 2 000 000 இற்கு விற்பனை செய்தது. இக்கொடுக்கல் வாங்கலைத் தீர்க்கும்போது பாவித்த இயந்திரமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூ. 300 000 விலைக்கும் காசு ரூ. 700 000 உம் வாங்குனரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. மிகுதித் தொகையை வாங்குநர் மூன்று மாத காலத்திற்குப் பின்னர் தீர்ப்பதற்கு உடன்பட்டார்.
மேற்கூறிய கொடுக்கல் வாங்கல் காரணமாக 2010 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இனங்காண வேண்டிய வருமானம் என்ன?