31.03.2014 ல் முடிவுற்ற மாதத்திற்கான வங்கிக் கூற்று மீதி ரூ. 34 800 காட்டியது. இது காசேட்டு மீதியுடன் இணங்கவில்லை. பின்வரும் விடயங்கள் காரணமாக அமைந்திருந்தது. கொடுப்பனவுக்கு வழங்கப்பட்ட ரூ. 7 400 காசோலை ஏப்ரல் 2014 ல்
வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டது. 28.03.2014ல் வைப்புச் செய்யப்பட்ட ரூ. 10 200 காசோலை 08.04.2014ல் வங்கிக் கூற்றில் பதிவு செய்யப்பட்டது. வங்கியில் நேரடியாக வைப்புச் செய்த ரூ. 4 100 காசும், வங்கி அறவீடு செய்த காசோலை புத்தகக் கட்டணம் ரூ. 450 உம் காசேட்டில் பதிவு செய்யப்படவில்லை. 31.03.2014ல் நிதிநிலைமைக் கூற்று பதிவு செய்யப்படும் வங்கி மீதி யாது?