புளோறியன் பொதுக்கம்பனியின் பரீட்சை மீதி சமப்படவில்லை. இந்த வித்தியாசம் தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன.
காப்புறுதிக்காக செலுத்திய காசு ரூ. 80 000 காசுப் புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டிருந்தது.
கொள்வனவு நாளேடு ரூ. 50 000 ஆல் மிகையாகக் கூட்டப்பட்டது.
கடன்பட்டோரிடம் பெற்ற ரூ. 35 000 கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் காசுக் கொடுப்பனவாகப் பதியப்பட்டது.
செலுத்திய வாடகை ரூ. 30 000 ஆனது காசுப் புத்தகத்தில் சரியாக பதியப்பட்ட போதிலும் அது வாடகை வருமானமாகப் பதியப்பட்டது.
மேற்படி பிழைகளைத் திருத்துவதற்கு முன்னராக தொங்கல் கணக்கு மீதி யாது?