சாரு நிறுவனத்தின் கொள்வனவுப் பேரேட்டுப் பட்டியல் மீதி மொத்தம் ரூபா 92 000 ஆக காணப்படும் வேளை கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி வேறொரு தொகையினைக் காட்டியது. கணக்குப் பரிசீலனையின் போது பின்வரும் வழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
A. கொள்வனவு நாளேடு ரூபா 12 000 மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
B. கடன்கொடுநரான மதனுக்கு செலுத்திய ரூபா 15 000 காசுத்தொகை அவரது கணக்கில் செலவுப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
C. கொள்வனவுகள் திரும்பல் நாளேட்டிலுள்ள ரூபா 4 000 தொகை கொள்வனவுப் பேரேட்டின் உரிய ஆள்சார் கணக்கில் 400 எனப் பதிவிடப்பட்டுள்ளது.
D. காசேட்டின் பெற்ற கழிவு நிரலின் கூட்டுத்தொகை ரூபா 5 000 கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கில் செலவுப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
வழுக்களைச் சீராக்கிய பின் கடன்கொடுநர் பேரேட்டுப் பட்டியல் மீதி யாது?