2015Bio08a

Author : Admin

Topic updated on 12/23/2016 11:51am

மென்டலியன் அல்லாத தலைமுறையுரிமையின் வெவ்வேறு கோலங்களை பொருத்தமான உதாரணங்களைக் கொண்டு விவரிக்குக.

 

RATE CONTENT 0, 0
Answers

நிறைவிலாட்சி Image Tip1

  • பரம்பரை அலகுகளின் எதிருருக்களின் ஆட்சி நிறைவற்றது / பகுதியானது
  • ஓரினநுக பெற்றோருக்கு (உறள்பொருள் இயல்புகளுடையவை) பல்லினநுகமுள்ள F1 இல் உருவாகும் சந்ததி, வேறுபட்ட / இடைப்பட்ட தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும்.
  • (ஒற்றைக் கலப்புக்குரிய) F2 தோற்றவமைப்பு விகிதம் 1:2:1 உ10ம் : ஆசையடிடைளை பூவின் நிறம்

இணை ஆட்சி Image Tipcodominance-inheritance-of-blood-group-2

பரம்பரை அலகுக்கான இரண்டு எதிருருக்களும் சமமாக ஆட்சியானவை / தெளிவான தோற்ற அமைப்புக்களை உருவாக்கும்.

பல்லினநுகம் இரு எதிருருக்களாலும் தீர்மானிக்கப்படும் இயல்புகளை வெளிக்காட்டுகின்றது.

ஒற்றைக்கலப்புப் பிறப்பாக்கல் F2 இனது தோற்றவமைப்பு விகிதம் 1:2:1

உ10ம் : மனித MN குருதிக்கூட்டங்கள் / மனித AB குருதிக்கூட்டம்

 

பரம்பரையலகு இடைத்தாக்கம் / மேலாட்சி

  • இரண்டு அல்லது மேற்பட்ட பரம்பரை அலகுகளினால் தீர்மானிக்கப்படும் இயல்புகளில் காணப்படும்.
  • ஒரு பரம்பரையலகின் வெளிப்படுத்தும் தன்மை வேறொரு பரம்பரை அலகினால் மறைக்கப்படல் / வெளிப்படாது தடுக்கப்படல்.

I. பின்னடைவான மேலாட்சி

  • பரம்பரை அலகு ஒன்றின் பின்னடைவான எதிருரு வேறொரு பரம்பரை அலகின் வெளிப்படுத்தலை மறைக்கும்.
  • இரட்டைக்கலப்புக்குரிய F2 தோற்ற அமைப்பு விகிதம் 9:7
  • உ10ம் : Lathyrus / இனிப்புப் பட்டாணியின் பூவின் நிறம்

II. ஆட்சியான மேலாட்சி

  • ஒரு பரம்பரை அலகின் ஆட்சியான எதிருருää வேறு ஒரு பரம்பரை அலகின் எதிருருக்களை மறைத்தல்.
  • இரட்டைக்கலப்புக்குரிய F2 தோற்றவமைப்பு விகிதம் 13:3
  • உ10ம் : வீட்டுக்கோழிகளின் இறக்கை நிறம்

 

பல்லெதிருருத்தன்மை

  • ஒரு பரம்பரையலகுக்கு இரண்டிற்கு மேற்பட்ட எதிருக்கள் காணப்படுதல். (குடித்தொகையில்)
  • எதிருருக்கள் ஆட்சி அல்லது இணையாட்சி / ஆட்சியின் வெவ்வேறு மட்டங்களை வெளிப்படுத்தலாம்.
  • உ+ம் : மனித A, B  O குருதிக்கூட்டங்கள்
  • IA, IB, iஎன்ற மூன்று எதிருருக்களினால் தீர்மானிக்கப்படும்.
  • IA யும் IB யும் இணையாட்சிக்குரியவை /IA, IB என்ற பிறப்புரிமையமைப்பு AB குருதிக் கூட்டவகையை உடையது.
  • IA, i என்ற எதிருருவுக்கு ஆட்சியானது / IAIA யும் IA i என்ற பிறப்புரிமையமைப்புகள் A குருதிக்கூட்டவகையை கொண்டிருக்கும்.
  • IB i என்ற பிறப்புரிமையமைப்புகள் B குருதிக் கூட்டத்தை உடையது.
  • i என்ற எதிருரு IA க்கும் IB க்கும் பின்னடைவானது / ii என்ற பிறப்புரிமையமைப்பு O குருதிக்கூட்டத்தைக் கொண்டிருக்கும்.

பல்பரம்பரையலகுப் பாரம்பரியம்

  • பல பரம்பரை அலகுகளினால் தீர்மானிக்கப்படும் ஒரு இயல்பு
  • பெறப்படும் இயல்பு அளவறியியல்பு உடையது.
  • பரம்பரையலகுகள் கூட்டத்தகவுடையன
  • எதிருருக்கள் ஆட்சியான இயல்பை காட்டக்கூடும்.
  • (குடித்தொகையில்) பரம்பரை இயல்புகள் சாதாரண பரம்பலைக் காட்டுகின்றன / இயல்புகளின் உச்ச நிலை அரிதாக காணப்படும், இடைநிலைகள் பொதுவானது.
  • மனிதனின் ஏதாவது அளந்தறியும் இயல்புகள்
  • உ10ம் : உயரம் / நிறை / நிறம் , பூக்களின் எண்ணிக்கை  பழங்களின் எண்ணிக்கை , முட்டைகளின் எண்ணிக்கை, பசுக்களில் உற்பத்தி செய்யப்படும் பால்

 

பரம்பரை அலகுகளின் இணைப்பு

  • ஒரே நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகுகளின் இணைப்பு
  • இணைந்த பரம்பரையலகுகள் ஒன்றாகத் தனிப்படுத்தப்படும் / சுயாதீனமாக தனிப்படுத்தப்படுவதில்லை.
  • ‘இணைப்பை’ தீர்மானிப்பதற்கு சோதனை இனங்கலப்புகள் பயன்படுத்தப்படும்.
  • இரட்டைக் கலப்புப் பிறப்பாக்கலுக்குரிய தோற்ற அமைப்பு விகிதம் 1:1:1:1 சமமற்றது.
  • சோதனைக் கலப்பு எச்சங்களில், பெற்றோரை ஒத்த வகைகள் மிகப் பொதுவானதாகவும் மீளச் சேர்கை வகைகள் வழக்கமாகக் குறைவாகவும் காணப்படும்.
  • உதாரணம் : Drosophila இன் உடலின் நிறம், இறகின் நீளத்தின் பாரம்பரியம்

 

இலிங்க இணைப்பு / இலிங்கமிணைந்த பாரம்பரியம்

X நிறமூர்த்தத்தினால் காவப்படும் பரம்பரையலகுகளினால் இது காட்டப்படும்.

இயல்பு / வெளிப்படுத்தப்படும் நோய் (பெரும்பாலும்) ஆண்களில், ஏனெனில் அவை ஒரு X நிறமூர்த்தத்தைக் கொண்டன.

X நிறமூர்த்தத்தின் மீது பின்னடைவான எதிருரு காணப்படுதல் (பெரும்பாலும்)

இயல்பு / நோய் பெண்களில் ஓரினநுகத்துக்குரிய பின்னடைவான நிலையில் வெளிப்படும்.

பல்லினநுக பெண்கள் காவிகளாவர் / தாயிலிருந்து மகனுக்கு பாரம்பரியம் அடையும்

மனிதனில் நிறக்குருடு / ஹீமோபிலியா

Comments Hide Comments(0)

Leave a Reply