ஒரு தாங்கியில் உள்ள எரி பொருள் மட்டத்தின் உயரத்தைத் துணிவதற்கு ஒரு வாகனத்தில் உள்ள எரிபொருள் கணிச்சி இரு செவ்வக உலோகத் தட்டுகளால் செய்யப்பட்ட ஒரு சமாந்தரத் தட்டுக் கொள்ளளவியைப் பயன்படுத்துகின்றது. 
உலோகத் தட்டுகள் (ABCD, PQRS) ஒவ்வொன்று அகலம் w வையும் உயரம் l ஐயும் உடையன. தட்டுகளுக்கிடையே உள்ள எரிபொருள் மட்டத்தின் உயரம் h ஆகும். (உருவைப் பார்க்க). வளி, எரிபொருள் கொள்ளளவிகளின் சேர் மானத்தின் பலிதக் (பயன்படும்) கொள்ளளவத்தை உரிய இலத்திரன் சுற்று E துணிகின்றது. இத்தொகுதியின் பலிதக் கொள்ளளவத்தைத் தருவது (k = எரிபொருளின் மின்னுழைய மாறிலி).