கைத்தொழிலின் கழிவு நீரைக் கார ஊடகத்தில் OCl– உடன் தொழிற்படுத்துவதன் மூலம் கழிவு நீரிலுள்ள சயனைட்டுஅயன்கள் N2 ஆகவும் காபனேற்று அயன்களாகவும் பின்வரும் சமன்பாட்டுக்கமைவாக மாற்றமடைகின்றன.
2CN– + 5 OCl– + 2 OH– → 2 CO32- + N2 +5Cl– + H2 O
இத் தாக்கம் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது / உண்மையானவை?
(a) OCl– இலுள்ள ஒட்சிசனின் ஒட்சியேற்ற எண் 0 இலிருந்து -2 ஆக மாற்றமடைகிறது.
(b) காபனின் ஒட்சியேற்ற எண் +2 இலிருந்து +4 ஆக மாற்றமடைகிறது.
(c) நைதரசனின் ஒட்சியேற்ற எண் -3 இலிருந்து 0 ஆக மாற்றமடைகிறது.
(d) குளோரின் ஒட்சியேற்ற எண் +1 இலிருந்து -1 ஆக மாற்றமடைகிறது.