மதி, மாறன், மாலதி இலாப நட்டங்கள் முறையே 3 : 2 : 1 எனப் பகிரும் பங்காளர்கள். 31.03.2016 இல் இப்பங்குடைமையில் இருந்து மாலதி இளைப்பாறினார். மதிப்பிடப்பட்ட நன்மதிப்பு மூலதனக் கணக்கில் சீராக்கப்பட்டது. மதியின் மூலதனக் கணக்கு மீதி மாற்றம் அடையவில்லை. மாறனின் மூலதனக் கணக்கு மீதி ரூ. 60 000 ஆல் குறைவடைந்தது. மதிப்பிடப்பட்ட நன்மதிப்பும் புதிய இலாப நட்ட விகிதமும் முறையே

A,B ஆகியோர் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இவர்கள் C என்பவரை இலாபத்தில் 1/5 பங்கு பெறும் நோக்கத்துடன் புதிய பங்காளனாக சேர்த்துக் கொண்டனர். C யினை புதிய பங்காளனாகச் சேர்த்தமையினால் A, B என்பவற்றுக்கிடையிலான இழப்பு விகிதம் முறையே 2:1 ஆகும். புதிய இலாப நட்ட விகிதம் யாது?

பங்குடைமை ஒன்றில் ஹரி, பானு, சானு ஆகிய பங்காளர்கள் முறையே ரூபா 300 000, 200 000, 100 000 ஆகிய பணத் தொகைகளை ஈடுபடுத்த விரும்பினர். எனினும் இவர்களுக்கிடையே உடன்படிக்கை ஏற்படுத்துவதில் பிணக்குகள் காணப்பட்டமையினால் 24வது சட்டவிதியைப் பின்பற்றினர். இப்பங்குடமையின் தகவல்கள் வருமாறு

  • முயற்சி 01.01.2015ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • பங்காளர் கடன்களுக்கு 5% வட்டி வழங்கப்படும்.
  • ஹரி நிர்வாகத்தில் ஈடுபட்டு ரூபா 20 000 ஆண்டுச் சம்பளம் பெற விரும்புகின்றார்.
  • பானு பங்குடமையின் அபிவிருத்திக்கு ரூபா 5 000 செலவு செய்கின்றார்.
  • 31.12.2015ல் உழைத்த இலாபம் ரூபா 60 000 ஆகும்.
    • பங்காளர் பற்றுக்கள்
    • ஹரி – ரூபா 10 000
    • பானு – ரூபா 15 000
    • சானு – ரூபா 5 000

31.12.2015ல் பங்காளர் நடைமுறைக்கணக்கு மீதியாக காட்டப்படும் தொகைகள் யாவை?

ஹரி, மறி, சிறி என்பவர்களால் நடாத்திச் செல்லப்பட்ட பங்குடமை வணிகத்தின் 2016.03.31 இல் முடிவடையும் வருடத்திற்கு தயாரித்த இலாபப் பகிர்வு கூற்று பின்வருமாறு

  • 2015.04.01 இல் பங்குடமை வணிகத்தின் நடைமுறைக் கணக்கு மீதிகள் பின்வருமாறு
    ஹரி – ரூபா 20 000
    மறி – ரூபா 40 000
    சிறி – ரூபா 50 000
  • நடப்பாண்டில் ஹரி ரூபா 80 000 ஐப் பற்றியுள்ளார்.
  • பங்காளர்கள் ஆரம்ப மூலதன மீதியினடிப்படையில் வருடாந்தம் 5% வட்டி பெற உரித்துடையவர்கள். 2015.10.01 இல் மறி மூலதன வட்டியாக ரூபா 50 000 ஐ காசாக எடுத்துள்ளார்.
  • 2015.04.01 இல் மறி ரூ 60 000 வருடாந்த வாடகையில் மோட்டார் வாகனமொன்றை பங்குடமை வணிகத்துக்கு வழங்கியிருந்தார். 2016.03.31 ஆம் திகதியாகும் போது வருடாந்த வாடகை செலுத்தப்படாதிருந்ததுடன் அது வருமானக் கூற்றில் சரியாக அறிக்கைப்படுத்தப்பட்டிருந்தது.
  • 2016.03.31 இல் சிறி பங்குடமை வணிகத்திலிருந்து ஓய்வு பெற்றதுடன் அத்திகதியில் மொத்த நன்மதிப்பானது ரூ. 600 000 ஆக மதிப்பிடப்பட்டதுடன் அதனை பங்காளரின் மூலதனக் கணக்கினூடாக சீராக்கம் செய்வதற்கு பங்காளர் இணங்கினர். சிறிக்கு செலுத்தவேண்டிய உரிமைத் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
  • புதிய பங்குடமையின் இலாபப்பகிர்வு வீதம் ஹரி, மறி இடையே முறையே 2 :1 ஆகும்.

2016.03.31 இல் பங்குடமை வணிகத்தின் மொத்த உரிமையும் கடனும் முறையே :

2016.03.31 பங்காளரின் மூலதனக் கணக்கில் மீதிகளாகக் காணப்படும் தொகை:

2016.03.31 இல் பங்காளரின் நடைமுறைக் கணக்கு மீதிகளாக அமைவன :

அருண், பாலா என்போர் 2014.04.01 இல் முறையே ரூபா 120 000, 100 000 மூலதனமாக ஈடுபடுத்தி பங்குடைமை வணிகமொன்றை ஆரம்பித்தனர். உடன்படிக்கையின்படி இலாபநட்டத்தை சமமாக பகிர்வது என்றும் வருடாந்த சம்பளமாக முறையே அருண் ரூபா 60 000, பாலா ரூபா 50 000 என எடுப்பது என்றும் உடன்பட்டு அனைத்து இலாபப் பகிர்வும், அனைத்து எடுப்பனவுகளும் மூலதனக் கணக்கில் பதித்துள்ளனர்.

  • 2015.03.31 இல் முடிவடைந்த நிதியாண்டில் அருண் ரூபா 35 000, பாலா 30 000 சம்பளம் காசாக எடுத்திருந்தனர்.
  • 2015.03.31 இல் பாலாவின் மூலதன மீதி ரூபா 145 000 ஆகும்.

2015.03.31 இல் பங்குடமை உரிமையாண்மை மீதி யாது?

2015.03.31 இல் பங்குடமை வணிகத்தில் உழைத்த இலாபம் யாது?

நிலானி, தர்சிகா, நித்யா ஆகிய மூவரும் முறையே 2 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களைப் பகிர்வு செய்யும் பங்குடைமையில் ஈடுபடுகின்றனர். மூலதன நிலுவைகளுக்கு வருடம் ஒன்றுக்கு 10% வட்டி வழங்கப்படும். ஆண்டுச் சம்பளமாக நிலானி 240 000, தர்சிகா 360 000, நித்யா 400 000 பெற வேண்டும். 31.03.2016 இல் முடிவுற்ற ஆண்டுக் காலத்தில் பங்குடைமை 3 000 000 இலாபமாக ஈட்டியுள்ளது.

இவ்வருடத்தில் பங்காளர்களின் எடுப்பனவுகள் நிலானி 150 000, தர்சிகா 200 000, நித்யா 250 000 ஆகும்.
01.04.2015 இல் மூலதன கணக்கு, நடைமுறை கணக்கு மீதிகள் பின்வருமாறு காணப்பட்டது.

31.03.2016 இல் இப்பங்குடைமையில் இருந்து நித்யா ஓய்வு பெற்றார். செலுத்த வேண்டிய தொகை கடன்கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். விலகல் தொடர்பில் நித்யாவின் நன்மதிப்புப் பங்கு ரூ. 200 000 ஆகும். நன்மதிப்பானது பங்காளர் மூலதன கணக்கு ஊடாக சீராக்கப்பட வேண்டும். நிலானியும் தர்சிகாவும் சமமாக இலாப நட்டங்களைப் பகிர்வு செய்து பங்குடைமையை நடத்த இணங்கினார்.

நித்யா ஓய்வு பெற்ற பின்னர் நிலானியின் மொத்த உரிமையாண்மையும் நித்யாவின் கடன் தொகையும்

31.03.2016 இல் உள்ளவாறு நிலானி தர்சிகா ஆகியோரின் நடைமுறை கணக்கு மீதி யாது?