கம்பனியொன்றின் கணக்காண்டு 31.03.2014 இல் முடிவடைந்தது. இயக்குனர்கள் நிதிக் கூற்றுகளை வழங்குவதற்கு 30.06.2014 இல் அதிகாரமளித்திருந்தனர். கம்பனியின் வருடாந்த பொதுக்கூட்டம் 15.07.2014 இல் இடம்பெற்றது. கம்பனி தொடர்பான பின்வரும் நிகழ்வுகள் 31.03.2014 இற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளன.
A – 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 500 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 30.04.2014 இல் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
B – 31.03.2014 இல் ரூ. 800 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 10.07.2014 இல் முறிவடைந்தவராகப்
பிரகடனப்படுத்தப்பட்டார்.
C – 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 600 000 கிரயத்தில் மதிப்பிடப்பட்ட சரக்கிருப்பானது 10.04.2014 இல் ரூ. 550 000 இற்கு விற்கப்பட்டது.
D – முதலீடுகளின் சந்தைப் பெறுமதியானது 30.04.2014 இலிருந்து 30.06.2014 வரையிலான காலப்பகுதியில் ரூ. 300 000 இனால் குறைவடைந்தது.
மேற்படி நிகழ்வுகளில் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் செய்யப்பட வேண்டியவை எவை ?
வரையறுத்த நந்தன் பொதுக்கம்பனியின் 31.03.2013 இல் முடிவடையும் வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களிற்கு 31.05.2013 இல் இயக்குனர்களால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. கம்பனியின் வருடாந்தப் பொதுக் கூட்டமானது 15.06.2013 இல் இடம்பெற்றுள்ளது. கம்பனி தொடர்பான பின்வரும் நிகழ்வுகள் 31.03.2013 இற்குப் பின்னர் இடம் பெற்றுள்ளது.
A – 01.04.2013 இலிருந்து 20.04.2013 வரை கொழும்பு பங்குப் பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளின் முதலீடுகளின் சந்தைப் பெறுமதியில் வீழ்ச்சி
B – முக்கிய வாடிக்கையாளர் ஒருவரால் 01.10.2012 இல் கம்பனிக்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கம்பனி பணம் செலுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி 30.04.2013 இல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு.
C – 31.03.2013 இல் முடிவடையும் வருடத்திற்கான இறுதிப்பங்கிலாபமாக பங்கொன்றிற்கு ரூ. 2 இனை 10.06.2013 இல் பிரகடனப்படுத்தல்.
D – 31.03.2013 இலுள்ள சரக்குகள் அதன் கிரயத்தினை விட குறைவான விலையில் 25.05.2013 இல் விற்பனை செய்யப்பட்டமை.
மேலே காணப்படும் எந்த நிகழ்வுகளை 31.03.2013 இலுள்ள நிதிக் கூற்றுக்களில் சீராக்கம் செய்தல் வேண்டும்?
பின்வரும் சூழ்நிலைகளில் எது / எவை கம்பனியின் நிதிக் கூற்றுக்களில் பொறுப்புகளுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக இனங்காண இட்டுச் செல்லும்?
A – பழுதடைந்தவைகள் திருத்திக் கொடுக்கப்படும் என்பதற்கிணங்க ஒரு வருட உத்தரவாதத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
B – வருட இறுதியில் வியாபாரக் கடன்பட்டோர் மீதியின் மீது ஐயக்கடனிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
C – சட்ட தேவைப்பாடு இல்லாத போதும் உற்பத்திச் செய்முறையால் ஏற்படும் சூழல் மாசடைதலினை
இயலக்கூடியளவிற்கு குறைத்தல் தேவையானதாகும்.
கட்டிடமொன்றின் எதிர்பார்க்கப்பட்ட பயன்தரு வாழ்வுக் காலத்தை மீள்மதிப்பீடு செய்யும்போது அதனால் அச்சொத்தின் வருடாந்த பெறுமானத்தேய்வில் ஏற்படும் மாற்றம் நிதிக் கூற்றுக்களில் எவ்வாறு பதியப்படும்?
வரையறுக்கப்பட்ட மதுரா பொதுக் கம்பனியின் 31.03.2012 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களுக்கு 30.06.2012 இல் அதன் இயக்குநர்கள் அங்கீகாரம் அளித்தனர். இக்கம்பனி தொடர்பில் 01.04.2012 இற்கும் 30.06.2012 இற்கும் இடையிலான காலப்பகுதியில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
A – தொடர்ச்சியாக நட்டத்தை அனுபவிக்கும் வியாபாரத்தின் அலகொன்றின் செயற்பாட்டை நிறுத்துவதற்கான திட்டமொன்றின் அறிவிப்பு
B – ஐந்தொகைத் திகதியிலுள்ள முறிவடைந்த கடன்பட்டவர் ஒருவரிடமிருந்து வரவேண்டிய கணிசமான தொகை
C – சந்தைவிலை வீழ்ச்சியினால் குறுங்கால முதலீடுகளின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி
D – ஐந்தொகைத் திகதியிலுள்ள பொறுப்பொன்றினை இனங்காண்பதை உறுதிசெய்த வழக்கொன்றின் தீர்ப்பு
மேற்கூறியவற்றுள் எவை ஐந்தொகைத் திகதியில் சீராக்கம் செய்யப்படல் வேண்டும்?
பின்வருவனவற்றில் எவை நிறுவனமொன்றில் நிகழத்தக்க பொறுப்புக்களாக வெளிப்படுத்த முடியும்?
A – நிதி நிறுவனமொன்றிடமிருந்து பெற்ற கடன்
B – நிறுவனத்திற்கு எதிரான தீர்க்கப்படாத வழக்கு
C – இன்னொரு நிறுவனத்தினால் பெறப்பட்ட கடன் ஒன்றிற்கு ஓர் உத்தரவாளராகச் செயற்படுவதற்கான உடன்படிக்கையொன்று
D – வங்கிக் கணக்கொன்றின் மேலதிகப் பற்று மீதி
கம்பனி ஒன்று 10 வருடங்களுக்கு முன்பு நிலமொன்றை வாங்கியது. இன்றுள்ள இதன் நியாயவிலையானது கொள்விலையின் 5 மடங்கு பெறுமதி கொண்டதாகும். நிலமானது நியாயவிலையில் மீள் மதிப்பீடு செய்யப்படுமாயின் இவ்வாறு செய்வதினை பின்வருவனவற்றுள் எக் கணக்கீட்டுத் தகவல்களின் பண்புசார் சிறப்பியல்பு பிரதிபலிக்கும்?
கம்பனியொன்று பெறுமானத்தேய்வு முறையினை நேர்கோட்டு முறையிலிருந்து குறைந்த செல்மீதி முறைக்கு நடைமுறையாண்டில் மாற்றியுள்ளது. மேற்கூறிய மாற்றத்தை சீராக்க வேண்டியது எதில்?
2011.03.31 இல் முடிவடைந்த நிதிக் கூற்றுகளில் கம்பனியொன்றின் இயக்குனர்கள் 2011.06.30 இல்
கையொப்பமிட்டுள்ளனர். நிதிக்கூற்றுக்கள் 2011.07.15 இல் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில்
பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டது. கீழ்வரும் நிகழ்வுகள் தொடர்பில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
A – வெள்ளம் காரணமாக 2011.05.20 இல் ரூ. 250 000 பெறுமதியான அலுவலக உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
B – 2009 இல் வாடிக்கையாளர் ஒருவரினால் கம்பனிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பில் 2011.06.15 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத் தீர்ப்பு ரூ. 150 000 இழப்பீட்டு பொறுப்பினை கம்பனிக்கு ஏற்படுத்தியுள்ளது.
C – 2011.03.31 இல் ரூ. 300 000 மீதியினை கொண்டுள்ள வாடிக்கையாளர் ஒருவர் 2011.07.05 இல் முறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். கம்பனியானது ஐந்தொகை தினத்தன்று இத்தொகைக்கான முழு ஏற்பாட்டையும் ஏற்கனவே செய்திருந்தது.
மேலுள்ள நிகழ்வுகளில் எவைகளுக்கு 2011.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் தேவைப்படுகிறது?
நிதி அறிக்கையிடலிற்காக எண்ணக்கரு சட்டகத்தினை (conceptual frame work) விருத்தி செய்வதற்குரிய காரணங்கள் பின்வருவனவற்றுள் எது?
A – கணக்கீட்டு நியமங்களை விருத்தி செய்வதற்கான அடிப்படையை வழங்குவதற்கு
B – நிதிக் கூற்றுகளைப் பயன்படுத்துவோர் அதனை சிறந்த முறையில் விளங்கிக்கொள்ள உதவுவதற்கு
C – பொருத்தமான கணக்கீட்டு நியமங்கள் இல்லாத நிலையில் நிதிக்கூற்றுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு
D – நிதித் தகவல்களின் தரத்தினை உயர்த்துவதற்கான கோட்பாட்டு அடிப்படையை வழங்குவதற்கு