கீழே தரப்பட்டவை மின்சாரக் கட்டண நுகர்வு தொடர்பில் ஒரு கம்பனி செலுத்த வேண்டிய வீதங்களாகும்.
500 அலகுகள் வரை – அலகொன்றிற்கு ரூபா 10
500 அலகிற்கு மேல் – மேலதிக ஒவ்வொரு அலகிற்கும் ரூபா 15

கம்பனியின் மொத்த மின்சாரக் கட்டணத்தைப் பின்வருவனவற்றுள் எந்த கிரய வரைபடம் சரியாகக் காட்டுகிறது?
பின்வரும் வரைபடமானது தனி ஒரு உற்பத்தி பொருள் 5 000 அலகுகள் விற்பனை மட்டத்தில் இலாப நட்ட வரைபு பின்வருமாறு தரப்படுகின்றது. காட்டப்பட்ட வரைபடத்தின்படி நிலையான செலவு

தொழிற்சாலை ஒன்றின் செயற்பாட்டு மட்ட அலகுகள் 200 ஆக உள்ள போது அலகு ஒன்றின் நிலையான கிரயம் ரூபா 32 ஆக இருந்தது.
செயற்பாட்டு மட்டம் குறைந்த போது அலகுக்கான நிலையான கிரயம் ரூபா 40 ஆக அதிகரித்தது. ஆனால் மொத்த கிரயம்ரூ. 14 400 ஆக இருந்தது. காலப்பகுதிக்கான மொத்த நிலையான கிரயத்தையும், அலகு ஒன்றுக்கான மாறும் கிரயத்தையும் கணிக்குக.
நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சமப்பாட்டு புள்ளி வரைபடம் பின்வருமாறு மேற்படி வரைபடத்தின் படி மொத்த நிலையான கிரயம் பெறுமதி யாது?

சினோ கம்பனி சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. பொம்மை ஒன்றின் மாறும் கிரயம் 12/=, மொத்த நிலைய கிரயம் 300 000/=, கம்பனி மாதமொன்றுக்கு விற்பனை செய்யும் பொம்மைகளின் எண்ணிக்கை 40 000 ஆகும். பாதுகாப்பு எல்லை 25 000 அலகுகள் ஆகும். பொம்மை ஒன்றை விற்பனை செய்யவேண்டிய விலை யாது?
பாடசாலை ஒன்றின் மாணவர்களின் இரண்டு நாள் கல்விச் சுற்றுலா தொடர்பான செலவுகளின் மதிப்பீடுகள் வருமாறு :
மாணவர் ஒருவருக்கான நாளொன்றுக்கான சாப்பாட்டுச் செலவு 200/=
மாணவர் ஒருவருக்கு நாளொன்றுக்கான தண்ணீர் செலவு 50/=
மாணவர் ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கும் அனுமதிச்சீட்டு செலவு 100/=
நாளொன்றுக்கான பஸ் கட்டணம் 15 000/=
வாடகைக்கு அமர்த்திய புகைப்பிடிப்பாளர் கட்டணம் 6 000/=
மாணவர் ஒருவரிடம் பெறவேண்டிய கட்டணம் 1 000/=
சுற்றுலாச் செலவை சமப்படுத்துவதற்கு தேவையான மாணவர்களின் எண்ணிக்கை யாது?
கம்பனியொன்றின் ஒரே காலப்பகுதிக்கான பாதீட்டு உற்பத்தி மேந்தலைகள் இரண்டு செயற்பாட்டு மட்டங்களில் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

அலகொன்றின் மூலக் கிரயம் ரூ. 10 என மதிப்பிடப்பட்டுள்ளது.
40 000 அலகுகள் கொண்ட செயற்பாட்டு மட்டத்தில் மொத்த மாறும் உற்பத்தி மேந்தலைகள் மற்றும் மொத்த உற்பத்திக் கிரயம் என்பன :
தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி 08, 09 வினாக்களுக்கு விடையளிக்குக.
அலகொன்றின் விற்பனை விலை 100 அலகொன்றின் மாறும் கிரயம் 50/- நிலையான கிரயம் – 100 000 இலாபமாக 10 000 உழைக்க வேண்டுமாயின் விற்பனை செய்யப்படும் விற்பனை அலகு யாது?
தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி 08, 09 வினாக்களுக்கு விடையளிக்குக.
அலகொன்றின் விற்பனை விலை 100 அலகொன்றின் மாறும் கிரயம் 50/- நிலையான கிரயம் – 100 000 அலகு ஒன்றிற்கான பங்களிப்பு யாது?
வணிகமொன்றின் 2015 சனவரி, பெப்ரவரி மாதங்களின் ஒருவகைப் பண்டமொன்று தொடர்பிலான தகவல்கள் பின்வருமாறு,

பங்களிப்பு விற்பனை விகிதம் எவ்வளவு?