36, 37, 38 ஆகிய வினாக்கள் பின்வரும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை.
ஒரு குறித்த ஆண்டில் க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் வணிகப் பாடத்துறையில் நாட்டின் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் முறையே யாழ்ப்பாணம், காலி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். அம்மாணவர் ஐவரின் பெயர்கள் A, B, C, D, E, ஆகும். அவர்கள் தெரிவுசெய்த பட்டக் கற்கைநெறிகளாவன கணக்கீடு, சந்தைப்படுத்தல், நிதியியல், வணிகவியல், வங்கியியல் ஆகியன ஆகும். எனினும் இவை எவ்வகையிலும் அதே ஒழுங்குமுறைப்படி தரப்படவில்லை.
✴ முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் வணிகவியல் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ வங்கியியல் பட்டத்தை தெரிவுசெய்த மாணவன் பெற்ற இடம் வணிகவியல் பட்டத்தையும்
சந்தைப்படுத்தல் பட்டத்தையும் தெரிவுசெய்த மாணவர் பெற்ற இடங்களுக்கு இடைப்பட்டது.
✴ ஐந்தாம் இடத்தைப் பெற்ற மாணவன் நிதியியல் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ கம்பஹா மாவட்ட மாணவன் கணக்கீட்டுப் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ A, D ஆகியோர் அடுத்தடுத்த இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.
✴ E சந்தைப்படுத்தல் பட்டத்தைத் தெரிவுசெய்துள்ளார்.
✴ B பெற்ற இடம், C இனதும் E இனதும் இடங்களுக்கு இடைப்பட்டது.
✴ D பெற்ற இடம் 5 ஆகும்.
காலி மாவட்ட மாணவன் கற்கைக்காக தெரிவுசெய்த பட்டம் யாது?
34, 35 ஆகிய வினாக்கள் யுஇ A, B, C, D, E, F ஆகிய ஆறு நகரங்களின் சார் அமைவு தொடர்பாக கீழே தரப்பட்டுள்ள விவரத்தை அடிப்படையாகக் கொண்டவை.
A இற்கு 80 கிலோமீற்றர் தெற்கே B அமைந்துள்ளது. A ஐயும் B ஐயும் இணைக்கும் கோட்டின் சரிநடுவில் C அமைந்துள்ளது. A இற்கு 30 கிலோமீற்றர் மேற்கில் D அமைந்துள்ளதோடு, C இற்கு மேற்கே F அமைந்துள்ளது. F இற்கு தெற்கிலும் B இலிருந்து 40 கிலோமீற்றர் மேற்கிலும் E அமைந்துள்ளது.
C நகரத்துக்கும் D நகரத்துக்கும் இடையிலான நேர்கோட்டுத் தூரம் எத்தனை கிலோமீற்றர்?
34, 35 ஆகிய வினாக்கள் யுஇ A, B, C, D, E, F ஆகிய ஆறு நகரங்களின் சார் அமைவு தொடர்பாக கீழே தரப்பட்டுள்ள விவரத்தை அடிப்படையாகக் கொண்டவை.
A இற்கு 80 கிலோமீற்றர் தெற்கே B அமைந்துள்ளது. A ஐயும் B ஐயும் இணைக்கும் கோட்டின் சரிநடுவில் C அமைந்துள்ளது. A இற்கு 30 கிலோமீற்றர் மேற்கில் D அமைந்துள்ளதோடு, C இற்கு மேற்கே F அமைந்துள்ளது. F இற்கு தெற்கிலும் B இலிருந்து 40 கிலோமீற்றர் மேற்கிலும் E அமைந்துள்ளது.
A நகரத்துக்கு சார்பாக F நகரம் அமைந்துள்ள திசை யாது?
30, 31 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
சாரதியொருவர் தனது வாகனத்தை அதிவேகப் பாதையில் 150 Km தூரத்தை 90 Km h−¹ சீரான வேகத்தில் செலுத்துவதற்கு எதிர்பார்த்தார். அவர் அதற்கமைய வாகனத்தை செலுத்தினாரெனினும் இடைவழியே சீரற்ற பாதை நிலைமை காரணமாக 15 Km தூரத்தை 75 Km h−¹ சீரான வேகத்தில் செலுத்த நேரிட்டது
வேகத்தைக் குறைத்ததன் காரணமாக, எதிர்பார்த்த நேரத்தை விட எத்தனை நிமிடங்களால் பயணம் தாமதமாகியது?