பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது வருமானக் கூற்றில் ஒவ்வொரு காலத்திற்குமான பெறுமானத் தேய்வினை இனங்காணுகின்றது?

 

பின்வருவனவற்றுள் எவை நிதிக் கணக்கீட்டுக்கான எண்ணக்கரு சட்டகத்தின் படி சொத்தொன்றின் குணாதிசயங்களாகும்?

A – இது நிறுவனமொன்றினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மூலவளமாகும்.
B – இதனூடாக அதன் எதிர்கால பொருளாதார நன்மைகள் அந்நிறுவனத்துள் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
C – இதன் கிரயம் அல்லது பெறுமதியை நம்பகரமாக அளவிட முடியும்.

 

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பவற்றை நடைமுறை மற்றும் நடைமுறையல்லாச் சொத்துகளாக வகைப்படுத்தலுக்கான அடிப்படையினை வழங்குகிறது ?

 

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது நிதிக் கூற்றுகளில் கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோரை இனங்காண்பதற்கான அடிப்படையினை வழங்குகிறது ?

 

பின்வருவனவற்றுள் எது நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் சட்டகத்தின் படி நிதிக் கூற்றுக்களின் முக்கிய பண்புசார் குணாதிசயங்களாக கருதப்படுகிறது?

A – பொருத்தப்பாடு
B – விளங்கிக்கொள்ளக்கூடியதன்மை
C – முன்னெச்சரிக்கை
D – முக்கியத்துவத்தன்மை

 

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது / எவை நிறுவனமொன்றின் நிதிக் கூற்றுக்களில் உத்தரவாதத்திற்கு ஏற்பாட்டினை மேற்கொள்வதுடன் தொடர்புடையதாகும்?

A – அட்டுறு                               B – இணைத்தல்                     C – முன்னெச்சரிக்கை

 

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களால் எது கணக்கீட்டுச் சமன்பாட்டில் உரிமையாண்மையினை ஒரு தனித்த கூறாக இனம் காணுமாறு வேண்டி நிற்கிறது?

 

விற்பனைக் கிரயத்தை ஒரு செலவினமாகவும் வருட முடிவிலுள்ள சரக்கிருப்பைச் சொத்தொன்றாகவும் மிகச் சிறப்பாக இனம்காணப் பயன்படுத்தப்படும் எண்ணக்கரு பின்வருவனவற்றுள் எது?

 

நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் சட்டகத்திற்கமைய நிதிக் கூற்றுக்களின் இரண்டு அடிப்படை எடுகோள்கள் எவை?

 

நிலுவை (accrual) கணக்கீடு தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் எது / எவை சரியானது/சரியானவை?

A – தேறிய இலாபம் என்பது செலவுகளுக்கான காசு வெளிப்பாய்ச்சலை விட வருமானங்களினால் எழும் காசு
உட்பாய்ச்சல்களின் மேலதிகமாகும்.
B – காலமொன்றுக்கான வருமானம் இனங்காணப்படுவது அதனை உழைக்கும் போதாகும்.
C – காசு அடிப்படையை விட நிலுவை அடிப்படை பொருளாதாரப் பெறுபேற்றை சிறந்த முறையில் மதிப்பீடு செய்கின்றது.