இல. 41, 42 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொழிற்பயிற்சிப் பாடநெறியொன்றுக்கு ஆட்சேர்ப்பதற்காகப் பின்வரும் தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள தகவல்களின் படி,
விண்ணப்பதாரி எல்லாத் தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனின் ………………….. a எனவும்
விண்ணப்பதாரி தகைமைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனின் …………………………………..b எனவும்
விண்ணப்பதாரிக்கு தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு பரீட்சைக்குத் தோற்ற
வேண்டியிருப்பின் ………………………………………………………………………………………………………….. c எனவும்
விண்ணப்பதாரி தாபன சபையின் இணக்கப்பாட்டினைப் பெற வேண்டுமாயின் ………… d எனவும்
முடிவெடுப்பதற்கு, தரப்பட்டுள்ள தரவுகள் போதாது எனின் …………………………………………… e எனவும் தெரிவு செய்க.
2003 டிசெம்பர் 31 ஆந் திகதியன்று பிறந்த இலங்கையரான சாவித்திரி, க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சையில் ஒரே தடவையில் தமிழ் மொழி, சைவநெறி, வரலாறு, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில மொழி, கர்நாடக சங்கீதம், விவசாயம் ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி பெற்றுள்ளார். பொதுத் தகவல் தொழினுட்பப் பரீட்சையில் உயர்திறமைச் சித்தியைப் பெற்றுள்ளார்.
இல. 41, 42 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
தொழிற்பயிற்சிப் பாடநெறியொன்றுக்கு ஆட்சேர்ப்பதற்காகப் பின்வரும் தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள தகவல்களின் படி,
விண்ணப்பதாரி எல்லாத் தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் எனின் ………………….. a எனவும்
விண்ணப்பதாரி தகைமைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனின் …………………………………..b எனவும்
விண்ணப்பதாரிக்கு தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கு பரீட்சைக்குத் தோற்ற
வேண்டியிருப்பின் ………………………………………………………………………………………………………….. c எனவும்
விண்ணப்பதாரி தாபன சபையின் இணக்கப்பாட்டினைப் பெற வேண்டுமாயின் ………… d எனவும்
முடிவெடுப்பதற்கு, தரப்பட்டுள்ள தரவுகள் போதாது எனின் …………………………………………… e எனவும் தெரிவு செய்க.
2000 ஜனவரி 01 ஆந் திகதி பிறந்த இலங்கையரான அருள், ஒரு தடவை மாத்திரம் க.பொ.த. (சாதாரண தர)ப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதோடு தமிழ்மொழி, சைவநெறி, வரலாறு, விஞ்ஞானம், ICT, கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியுடன் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியைப் பெற்றுள்ளார்.
36 தொடக்கம் 38 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
மத்திய மகா வித்தியாலயமொன்றினது க.பொ.த.(உயர் தரம்)-2020 பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள், பொதுச் சாதாரணப் பரீட்சையில் மிகக்கூடுதலான புள்ளிகள் பெற்ற ஏழு பேர் புலமைப்பரிசில் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டனர். மிகக் கூடுதலான புள்ளிகள் பெற்ற இந்த ஏழு பேருள் பௌதீகவியல் துறை மாணவர்கள் இருவர், உயிரியல் துறை மாணவர் ஒருவர், தொழினுட்பவியல் துறை மாணவர்கள் இருவர், வணிகத்துறை மாணவர் ஒருவர், கலைத்துறை மாணவர் ஒருவர் அடங்கியுள்ளனர். அவர்களுள் எந்த இருவரதும் பொதுச் சாதாரண பரீட்சைப் புள்ளிகள் சமமானவை அல்ல.
✴ தொழினுட்பவியல் துறை மாணவர்களுக்கு முதலாம் இடமோ ஐந்தாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ வணிகத்துறை மாணவனுக்கு இரண்டாம் இடமோ ஆறாம் இடமோ கிடைக்கவில்லை.
✴ கூடிய புள்ளிகள் பெற்ற தொழினுட்பவியல் துறை மாணவன் பெற்ற இடத்துக்கும், வணிகத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கும் இடையே ஒரு மாணவன் மாத்திரம் உள்ளனர்.
✴ கலைத்துறை மாணவன் பெற்ற இடம், குறைந்தபுள்ளி பெற்ற தொழினுட்பத்துறை மாணவன் பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
✴ உயிரியல் துறை மாணவன் பெற்ற இடம், உயர்புள்ளி பெற்ற பௌதிகவியல் துறை மாணவன்
பெற்ற இடத்துக்கு பின்னர் வரும் அடுத்த இடமாகும்.
தொழினுட்பவியற் துறை மாணவர்கள் இருவரும் எந்தெந்த இடங்களுக்குத் தெரிவாகினர்?

ஏழாம் இடத்துக்குத் தெரிவாகிய மாணவன் எந்தப் பாடத்துறையைச் சேர்ந்தவர்?
33 தொடக்கம் 35 வரையிலான வினாக்கள் பீகிப்து, சீகிப்து எனும் புனையப்பட்ட இரண்டு இராசதானிகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றுள் ஓர் இராசதானியில் அடி 2 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளதோடு மற்றைய இராசதானியில் அடி 3 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கேயுரிய எண் குறியீட்டுத் தொகுதியொன்றையும் பயன்படுத்தினர். பீகிப்து மக்கள் ~@~ என எழுதிய எண்ணை சீகிப்து மக்கள் &# என எழுதினர்.
சீகிப்து மக்கள் &$ என எழுதிய எண்ணை பீகிப்து மக்கள் எவ்வாறு எழுதினர்?
33 தொடக்கம் 35 வரையிலான வினாக்கள் பீகிப்து, சீகிப்து எனும் புனையப்பட்ட இரண்டு இராசதானிகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றுள் ஓர் இராசதானியில் அடி 2 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளதோடு மற்றைய இராசதானியில் அடி 3 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கேயுரிய எண் குறியீட்டுத் தொகுதியொன்றையும் பயன்படுத்தினர். பீகிப்து மக்கள் ~@~ என எழுதிய எண்ணை சீகிப்து மக்கள் &# என எழுதினர்.
சீகிப்து மக்கள் ## என எழுதிய எண்ணை பீகிப்து மக்கள் எவ்வாறு எழுதினர்?
30 தொடக்கம் 32 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. பாடசாலைத் தோட்டத்தில் பழமரங்களுக்குத் தடியால் அடித்து ஏழு மாம்பழங்களையும், ஐந்து தோடம்பழங்களையும் நிலத்தில் வீழ்த்திய குற்றத்துக்காக ஐந்து மாணவர்களை அழைத்து அவ்வொவ்வொரு மாணவரும் பறித்த பழங்களின் எண்ணிக்கை குறித்து வினவிய போது அவர்கள் வழங்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அமல் – ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
பவன் – இரண்டு மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
காசிம் – இரண்டு மாம்பழங்கள் மாத்திரம்
டேவிட் – ஒரு மாம்பழமும் இரண்டு தோடம்பழங்களும் மாத்திரம்
எமில் – ஒரு தோடம்பழம் மாத்திரம்
உண்மை சொல்லுவோரினால் பறிக்கப்பட்ட மாம்பழங்களின் எண்ணிக்கை நான்கும், பொய் சொல்வோரினால் பறிக்கப்பட்ட தோடம்பழங்களின் எண்ணிக்கை இரண்டும் எனின், உண்மையில் அமல் பறித்தவை யாவை?
30 தொடக்கம் 32 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. பாடசாலைத் தோட்டத்தில் பழமரங்களுக்குத் தடியால் அடித்து ஏழு மாம்பழங்களையும், ஐந்து தோடம்பழங்களையும் நிலத்தில் வீழ்த்திய குற்றத்துக்காக ஐந்து மாணவர்களை அழைத்து அவ்வொவ்வொரு மாணவரும் பறித்த பழங்களின் எண்ணிக்கை குறித்து வினவிய போது அவர்கள் வழங்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அமல் – ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
பவன் – இரண்டு மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
காசிம் – இரண்டு மாம்பழங்கள் மாத்திரம்
டேவிட் – ஒரு மாம்பழமும் இரண்டு தோடம்பழங்களும் மாத்திரம்
எமில் – ஒரு தோடம்பழம் மாத்திரம்
ஒருவர் மாத்திரம் பொய் சொல்கிறார் எனின், அவர் உண்மையில் மூன்று மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம் பறித்துள்ளார் எனின், அவர் யாராக இருக்க முடியும்?