வணிகமொன்று 2015.03.31 இல் ரூபா 90 000 முன்கொண்டுவரும் பெறுமதியுள்ள இயந்திரமொன்றை வழங்கி ரூபா 150 000 பெறுமதியான புதிய இயந்திரமொன்றை அன்றே பெற்றுக்கொண்டது. இதற்காக பழைய இயந்திரத்துடன் ரூபா 70 000 காசும் செலுத்தப்பட்டது. இவ் இயந்திர வழங்கலினால் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?

 

கிங்ஸ் அச்சகம் வெளிநாட்டிலிருந்து ஒரு புதிய அச்சுப் பொறியை வாங்கியது. இப்பொறியினால் பின்வரும் கிரயங்கள் எழுந்தன.

பரீட்சார்ந்த இயக்கத்தின் போது அச்சடிக்கப்பட்டவை ரூபா 30 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.

 

2011.03.31 இல் நிறுவனம் 40 000 கிரயமுடையதும் 25 000/= திரண்ட பெறுமானத் தேய்வையும் கொண்ட
இயந்திரமொன்றை 10 000/= பெறுமதி மதிப்பிடப்பட்டு 50 000/=க்கு இயந்திரமொன்று அதே தினத்தில் பகுதி மாற்றம் செய்யப்பட்டது. மிகுதிப்பணம் காசாக செலுத்தப்பட்டது. இப்பரிமாற்றம் தொடர்பாக எழும் விளைவு

 

01.01.2008 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் ஒன்று 01.01.2011 இல் ரூ. 240 000 விற்பனை செய்த போது ரூ. 5 000 நட்டம் ஏற்பட்டது. இயந்திரங்கள் கிரயத்தில் 10% பெறுமானத் தேய்விடப்படுகிறது எனில் இயந்திரத்தின் கிரயம்

 

வரையறுத்த SRS கம்பனியின் 31.03.2011 இல் முடிவுற்ற நிதி ஆண்டில் 01.07.2004 இல் ரூபா 500 000/- இற்கு கொள்வனவு செய்யப்பட்ட வாகனமொன்றை 01.07.2010 இல் ரூபா 75 000/- இற்கு விற்பனை செய்தது. இவ் வாகனத்தின் இறுதிப் பெறுமதி ரூபா 100 000/- பயன்தரு ஆயுட்காலம் 5 வருடங்களாகும். இவ் வாகனத்தின் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட இலாப நட்டம் யாது?

 

கீழே தரப்பட்ட நடவடிக்கைகள் வரையறுத்த பூமிகா பொதுக்கம்பனியின் தளபாடம் தொடர்பான விபரங்கள்

வருட ஆரம்பத்தில் காணப்பட்ட தளபாடம் 01.04.2010ல் கொள்வனவு செய்யப்பட்டதாகும். இவ்வருடத்தில் அகற்றப்பட்ட தளபாடம் ரூபா 5 000 000, தளபாடம் நேர்கோட்டு முறையில் வருடாந்தம் 10% பெறுமானத்தேய்வு செய்யப்படுகின்றது. 31.03.2016ல் முடிவடைந்த வருடத்திற்கான தளபாடத்துக்கான பெறுமானத்தேய்வு மற்றும் அகற்றப்பட்ட தளபாடம் தொடர்பாக விற்பனையில் இருந்து பெற்ற தொகையும் பின்வருவனவற்றுள் எவை?

 

31 மார்ச் 2014 இல் முடிவுற்ற ஆண்டுக்கு நடைமுறையல்லாச் சொத்துக்கள் பற்றிய தரவுகள் கீழ்வருமாறு ஆதனம், பொறி உபகரணங்கள்

புதிய சொத்து காசு அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டது, ரூபா 2 000 இலாபத்தில் சொத்து தள்ளுபடி செய்யப்பட்டது. காசுப்பாய்வுக் கூற்றில் ஆதனம், பொறி உபகரணங்கள் தொடர்பான தேறிய காசுப் பாய்ச்சல் எவ்வளவு?

 

சகானா நிறுவனத்தின் நிதிவருடம் 31.12.2012இல் முடிவடைகின்றது. இந்நிறுவனம் 30.06.2012இல் புதிய பொறி ஒன்றை 420 000 இற்கு கொள்வனவு செய்தது. இப்பொறி தொடர்பாக எழுந்த ஏனைய கிரயங்கள் வருமாறு

31.12.2012 இல் இப்பொறியின் கிரயமும் பெறுமானத் தேய்வுத் தொகையும்

 

பெறுமதிசேர் வரி (VAT) பதிவினைக் கொண்டிராத வரையறுத்த பொதுக்கம்பனியானது 01.04.2015ல் மோட்டார் வாகனம் ஒன்றினை ரூபா 5 760 000 இற்கு வாங்கியது. இத்தொகையில் ஏயுவு இற்காக செலுத்திய ரூபா 760 000 உள்ளடங்கியது. இம்மோட்டார் வாகனத்தின் பயன்தரு ஆயட்காலம் 10 ஆண்டுகளாகும். இதற்கு எஞ்சிய பெறுமதி எதுவும் இல்லை. டுமுயுளு 16 இன்படி 31.03.2016ல் உள்ளவாறான மோட்டார் வாகனத்தின் கொண்டுசெல்லல் தொகை யாது?

 

01.01.2010ல் ரூ. 200 000க்கு இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு 01.01.2013ல் ரூ. 164 000க்கு விற்பனை
செய்யப்பட்டது. இயந்திரங்களுக்கு குன்றும் நிலுவை முறையில் 10மூ பெறுமானத்தேய்வு செய்யப்படுகிறது. நிறுவனத்தின் நிதி வருடம் 31 டிசெம்பரில் முடிவடைகிறது. இயந்திர விற்பனையினால் ஏற்பட்ட இலாபம்/ நட்டம்.