சுதர்சன் வியாபார ஸ்தாபனத்தின் நிதிவருடம் 31.03.2013 இல் முடிவடைகிறது. 01.07.2012 இல் ஒரு வருட வாடகையாக 30.06.2013 வரை ரூ. 360 000 செலுத்தப்பட்டது. 31.03.2013 முடிவுற்ற வருடத்தில் செலவினமாக இனங்காணப்படும் வாடகையும் அத்திகதியில் சொத்தாக பதிவு செய்யும் வாடகையும் முறையே

 

நிறுவனமொன்றின் ஜனவரி மாதத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் வருமாறு :

  1. அலுவலக தளபாடங்கள் கொள்வனவுக்கு செலுத்திய பணம் 8 000.
  2. அலுவலக ஊழியர்களுக்கான செலுத்தப்பட்ட சம்பளம் 6 000 செலுத்த வேண்டியது 4 000.
  3.  ஜனவரி மின்சாரப் பட்டியல் பெறுமதி 3 000 செலுத்தியது 2 000.
  4. உரிமையாளர் சொந்த தேவைக்கு எடுத்த காசு 1 000.
  5. 10 000வுக்கு கொள்வனவு செய்த பொருட்கள் 16 000 விற்கு விற்பனை செய்யப்பட்டது.

ஜனவரி மாதத்திற்கான வருமானம், உழைப்பதற்கு எழுந்த செலவுகளின் மொத்தம் யாது?

 

கம்பனி ஒன்றின் அறவிடமுடியாக் கடன் ஐயக்கடன் ஏற்பாடு ஆகியவற்றின் மீதிகள்

31.03.2015இல் முடிவடைந்த ஆண்டில் வருமானக் கூற்றுக்கு மாற்ற வேண்டிய அறவிட முடியாத ஐயக்கடன் பெறுமதி யாது?

 

வணிகமொன்றில் 2014ம் ஆண்டு முடிவில் இறுதி இருப்பானது தவறுதலாக 10 000 கூடுதலாக கணிப்பிடப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது. இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சரியான விளைவுகள

 

நிறுவனமொன்று 01.07.2014இல் வாடகைப் பணமாக 96 000ஐ 31.06.2015 இல் முடிவடையும் வருடத்திற்காகச் செலுத்தியது. 31.03.2015இல் முடிவடையும் ஆண்டுக்கான பின்வரும் சரியான தொகைகளை காட்டுக.

 

நிறுவனமொன்று 108 000 விற்பனை விலையில் (கிரயத்தில் 20% இலாபம் உள்ளடக்கியது) விற்பனையன்றேல் திருப்பி அனுப்புக என்ற அடிப்படையில் பொருட்களை அனுப்பியது. இதனை வருடத்திற்கான கடன் விற்பனையாக கணக்கிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் கணக்கிடப்பட்ட இலாபம் 120 000 ஆனால், ஆண்டு இறுதியில் இலாபம் கணக்கிடப்பட்ட பின்னர் அனுப்பப்பட்ட பொருட்களில் 50% மானவை விற்பனையாகவில்லை என்ற தகவல் கிடைத்தது. இவ்வருடத்திற்கான சரியான இலாபம் யாது?

 

31.03.2015இல் முடிவடைந்த கணக்காண்டில் தேறிய கொள்வனவு 60 000. இருப்பில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு 20 000. மொத்த இலாப வீதம் 20% ஆண்டுக்கான விற்பனை யாது?

 

31.03.2014இல் முடிவடையும் ஆண்டில் செலுத்திய வாடகை 5 600. 31.03.2013இல் முற்பணமும் 31.03.2014 இல்
நிலுவைகளும் முறையே 500/-, 400/-
31.03.2015 இல் வருமானக் கூற்றில் வெளிப்படுத்த வேண்டிய பெறுமானம் யாது?

 

01.01.2014இல் கடன்படுனர் மீதி 120 000. ஐயக்கடன் ஏற்பாட்டு மீதி 9 600. 31.12.2014இல் கடன்பட்டோர் மீதி 150 000. இவ்வாண்டு பதிவளிக்கப்பட்ட அறவிடமுடியாத கடன் 2 000. மீளப்பெற்ற அறவிட முடியாக் கடன் 3 000. வருடம் தோறும் ஒரே வீதத்தையே அறவிடமுடியாத ஐயக்கடனுக்காக ஏற்பாடு பின்பற்றுவது வழமையாகும். 31.12.2014 ஆம் ஆண்டு வருமானக் கூற்றில் வெளிப்படுத்த வேண்டிய தொகை யாது?

 

01.01.2015 இல் கடன்பட்டோர் மீதி 5 000. ஐயக்கடன் ஏற்பாட்டு கணக்கு மீதி 1 500. இவ்வாண்டு கடன் விற்பனைகள் 20 000. உட்திருப்பம் 2 000. கடன்பட்டோரிடம் பெற்ற காசு 4 800. கொடுத்த கழிவு 200. அறவிடமுடியாக் கடன் பதிவளித்தல் 500. ஐயக்கடன் ஏற்பாடு 3% ஆகும். அறவிடமுடியாக் ஐயக்கடன் கணக்கின் மூலம் இலாப நட்டக் கணக்கில் தாக்கல் செய்யும் தொகை யாது?