நிறுவனமொன்று கணக்கீட்டுக் காலமொன்றுக்கான உற்பத்திக் கிரயத்தினை பின்வருமாறு கணித்துள்ளது.

மேலுள்ள கிரயத்தினைக் கணிக்கும்போது பின்வரும் மேலதிக தகவல்கள் கருத்திற் கொள்ளப்படவில்லை.

  • சரியான கையாளுதல் இல்லாமையினால் ரூ. 40 000 பெறுமதியான மூலப் பொருள்கள் முழுமையாக அழிவடைந்திருந்தன.
  • உற்பத்தியில் பயன்படுத்திய இயந்திரங்களுக்காக ரூ. 20 000 வருடாந்த பெறுமானத் தேய்வு விடுபட்டிருந்தது.
  • உற்பத்தியுடன் தொடர்புடைய பதியப்படாத மின்சாரச் செலவுகள் ரூ. 60 000 ஆகும்.
  • உற்பத்தி மேந்தலைக் கிரயமானது அலுவலக வாடகை ரூ. 80 000 ஐ உள்ளடக்கியுள்ளது.
  • இக்காலப் பகுதி முடிவிலுள்ள குறை வேலையானது ரூ. 30 000 இனால் குறைத்து எழுதப்பட்டுள்ளது.

மேலுள்ள மேலதிக தகவல்களைக் கருத்திற்கொண்டதன் பின்னரான குறித்த காலத்திற்குரிய உற்பத்திக் கிரயம் எது?

நிறுவனமொன்று கணக்கீட்டுக் காலமொன்றுக்கான உற்பத்திக் கிரயத்தினை பின்வருமாறு கணித்துள்ளது.

மேலுள்ள கிரயத்தினைக் கணிக்கும்போது பின்வரும் மேலதிக தகவல்கள் கருத்திற் கொள்ளப்படவில்லை.

  • சரியான கையாளுதல் இல்லாமையினால் ரூ. 40 000 பெறுமதியான மூலப் பொருள்கள் முழுமையாக அழிவடைந்திருந்தன.
  •  உற்பத்தியில் பயன்படுத்திய இயந்திரங்களுக்காக ரூ. 20 000 வருடாந்த பெறுமானத் தேய்வு விடுபட்டிருந்தது.
  • உற்பத்தியுடன் தொடர்புடைய பதியப்படாத மின்சாரச் செலவுகள் ரூ. 60 000 ஆகும்.
  • உற்பத்தி மேந்தலைக் கிரயமானது அலுவலக வாடகை ரூ. 80 000 ஐ உள்ளடக்கியுள்ளது.
  • இக்காலப் பகுதி முடிவிலுள்ள குறை வேலையானது ரூ. 30 000 இனால் குறைத்து எழுதப்பட்டுள்ளது.

மேலுள்ள மேலதிக தகவல்களைக் கருத்திற்கொள்வதற்கு முன்னரான குறித்த காலத்திற்குரிய விற்பனைக் கிரயம் எது?

2010.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் தகவல்கள் உற்பத்தி நிறுவனமொன்றிலிருந்து பெறப்பட்டதாகும்.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கிரயம் என்ன?

வியாபாரமொன்று 2007 ஆம் கணக்காண்டின் முடிவில் கணக்குப் பதிவிடலில் எழுந்த தவறு காரணமாக இறுதிச் சரக்கிருப்பை ரூ. 400 000 இனால் கூடுதலாகக் குறிப்பிட்டிருந்தது. இது 2007 ஆம் ஆண்டிற்கான விற்ற சரக்கின் கிரயத்திலும், தேறிய இலாபத்திலும் எவ்வாறான தாக்கத்தைக் கொண்டிருக்கும்?

2007 டிசம்பர் மாதத்திற்கான கம்பனியொன்றின் ஊழியர்களின் மொத்தச் சம்பளம் ரூ. 300 000 ஆகும். தொழில் தருநரினாலும், ஊழியரினாலும் பங்களிப்புச் செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதி முறையே 15% மும் 10% மும் ஆகும். ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பு 3% ஆகும். இம்மாத காலத்தில் மீட்புச் செய்யப்பட்ட ஊழியர் கடன்கள் தொகை ரூ. 40 000 ஆகும். 2007 டிசெம்பர் மாதத்திற்கான தேறிய சம்பளமும் % கம்பனியினது ஊழியர் தொடர்பான மொத்தச் செலவுகளும் யாவை?

சூரியன் பிரயாணக் கம்பனி நான்கு சுற்றுலாப் பயணங்களுக்கான விடுமுறைப் பொதிக்கான பிரயாணக் கட்டணம் ரூ. 400 000 ஐ (ஒரு சுற்றுலாப் பயணத்திற்கான கட்டணம் ரூ. 100 000 படி) வாடிக்கையாளரிடமிருந்து முற்பணமாகப் பெற்றுக் கொண்டது. இவ்வருட காலத்தில் மூன்று சுற்றுலாப் பயணங்கள் மாத்திரம் முடிவடைந்திருந்ததால், கம்பனிகள் நிதிக் கூற்றுக்களில் எத்தொகையை வருமானம், பொறுப்பு எனக் காட்டுதல் வேண்டும்?

பின்வருவனவற்றில் எது ஏற்கனவே விசேடமாக ஐயக்கடன் ஏற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட கடன்பட்டோரொருவர் முறிவடைந்ததால் எழுந்த அறவிடமுடியாக் கடனைப் பதிவதற்குச் சரியான இரட்டைப் பதிவு

வரையறுத்த அருணா நிறுவனத்தின் அறவிடமுடியாக்கடன், ஐயக்கடனிற்கான ஏற்பாடு ஆகியவற்றின் மீதிகள் பின்வருமாறு :

31.03.2007 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கில் அறவிட வேண்டிய அறவிடமுடியாக் கடன், ஐயக்கடன் என்பவற்றின் பெறுமதி யாது?

இறுதி இருப்பினைக் குறைவாகக் காட்டும்போது வருமானக் கூற்றின் உருப்படிகளில் ஏற்படும் தாக்கம் என்ன?

சுரேஷ் வியாபாரத்தில் ஒக்டோபர் மாத காலத்தினுள் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் எழுந்தன.

  • அலுவலக உபகரணத்தை கொள்வனவு செய்தமைக்காக மாத முடிவில் ரூபா 7 500 செலுத்தப்பட்டது.
  • காசுக் கொள்வனவு ரூபா 10 000. இக்கொள்வனவில் ரூபா 7 000 கிரயமுள்ள பொருட்கள் இம்மாத காலத்தினுள் விற்பனை செய்யப்பட்டன.
  • இம்மாதத்திற்கான மின்சார கட்டணப் பட்டியல் ரூபா 1 000
  • உரிமையாளரின் சொந்த பாவனைக்காக ரூபா 2 000 செலுத்தப்பட்டது.
  • ஒக்டோபர் மாதத்திற்கான அலுவலக ஊழியருக்கான சம்பளம் ரூபா 6 000 செலுத்தப்பட்டது.

இவ்வியாபாரத்தின் ஒக்டோபர் மாதத்திற்கான வருமானத்திற்கு எதிரான மொத்த செலவுத் தொகை என்ன?