பண்ட வணிக நிறுவனத்தின் 2011.03.01ல் இருந்தபடி சொத்துக்கள் ரூபா 150 000 பொறுப்புகள் ரூபா 60 000 ஆகவும் காணப்பட்டன. மார்ச் மாதம் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் பின்வருமாறு

  1. வங்கிக்கடன் தவணைப் பணக்கொடுப்பனவு ரூபா 8800 உரிமையாளர் தனது சொந்த நிதியில் இருந்து செலுத்தியிருந்தார். இக்கொடுப்பனவில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாத வங்கிக்கடன் வட்டி ரூபா 1800 உள்ளடங்கும்.
  2. வங்கியில் வைப்புச் செய்து கடன்பட்டோர் காசோலை ரூ. 12 000 வங்கியால் மறுக்கப்பட்டவை காசேட்டில் சீராக்கப்பட்டிருக்கவில்லை.
  3. சொந்த உபயோகத்திற்கென ரூபா 6 000 பெறுமதியான இருப்புக்களை உரிமையாளர் எடுத்திருந்தார்.
  4. ரூபா 20 000 கிரயமான இருப்புக்கள் ரூபா 32 000 இற்கு கடனுக்கு விற்கப்பட்டன.

மேற்படி கொடுக்கல் வாங்கல்களின் பின்னர் தொழிற்படு மூலதனத்தில் ஏற்பட்ட மாற்றம் யாது?

 

பண்ட வணிக நிறுவனத்தின் 2011.03.01ல் இருந்தபடி சொத்துக்கள் ரூபா 150 000 பொறுப்புகள் ரூபா 60 000 ஆகவும் காணப்பட்டன. மார்ச் மாதம் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் பின்வருமாறு

  1. வங்கிக்கடன் தவணைப் பணக்கொடுப்பனவு ரூபா 8800 உரிமையாளர் தனது சொந்த நிதியில் இருந்து செலுத்தியிருந்தார். இக்கொடுப்பனவில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாத வங்கிக்கடன் வட்டி ரூபா 1800 உள்ளடங்கும்.
  2. வங்கியில் வைப்புச் செய்து கடன்பட்டோர் காசோலை ரூ. 12 000 வங்கியால் மறுக்கப்பட்டவை காசேட்டில் சீராக்கப்பட்டிருக்கவில்லை.
  3. சொந்த உபயோகத்திற்கென ரூபா 6 000 பெறுமதியான இருப்புக்களை உரிமையாளர் எடுத்திருந்தார்.
  4. ரூபா 20 000 கிரயமான இருப்புக்கள் ரூபா 32 000 இற்கு கடனுக்கு விற்கப்பட்டன.

மேற்படி கொடுக்கல் வாங்கல்களின் பின்னர் 2011 மார்ச் 31 இல் தேறிய சொத்தின் பெறுமதி?

 

2011.03.31 இல் வருமானக் கூற்றில் உள்ளடக்கப்படும் விற்பனைப் பெறுமதியும் கொள்வனவு பெறுமதியும் முறையே

 

நிறுவனம் ஒன்று நிதிக்கூற்றுகளைத் தயாரிக்கும் போது இருப்புச் சரக்கின் பெறுமதி கிரயத்தில் மட்டும் கணிப்பீடு செய்து உட்படுத்தி இருந்தது. ஆனால் ஒரு தொகைப் பண்டங்கள் கிரயத்திலும் ரூபா 15 000 அதிகரித்த பெறுமதியிலும் ஏனையவை ரூபா 20 000 குறைந்த பெறுமதியிலும் காணப்பட்டது கண்டறியப்பட்டது. இதற்கான திருத்தம் பின்வரும் உருப்படிகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

கம்பனியொன்றில் 31.03.2012 இல் ஏற்பட்ட தீ விபத்தில் கம்பனியில் இருப்புகளில் ஒரு பகுதி சேதமடைந்தது. தீ விபத்தினால் காப்பாற்றப்பட்ட இருப்புகளின் பெறுமதி ரூபா 10 000 ஆகும். இத்தினத்தில் பின்வரும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

01.04.2011 இல் இருப்பு ரூபா 40 000
வருடத்திற்கான கொள்வனவு ரூபா 100 000
வருடத்துக்கான விற்பனை ரூபா 200 000
நிறுவனத்தின் சாதாரண மொத்த இலாபம் விற்பனையில் 40% ஆகும்.

தீயினால் அழிவடைந்த இருப்புக்களின் 60 % த்தினை நட்டஈட்டு கம்பனி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. தீயால் அழிந்த இருப்பின் பெறுமானமும் நட்டஈட்டு உத்தரவாதமும் முறையே

 

ஆண்டின் போது ரூ. 40 000 கிரயமான பண்டம் தீயால் அழிவடைந்தது. காப்புறுதி கம்பனியிடம் இருந்து ரூ. 32 000 பெறப்பட்டு அது விற்பனை கணக்கில் செலவு வைக்கப்பட்டது. வேறு பதிவு செய்யப்படவில்லை. மொத்த இலாபத்திலும் தேறிய இலாபத்திலும் ஏற்பட்ட விளைவு

 

சங்கரன்ஸ் நிறுவனத்தின் 31.12.2012இல் முடிவடைந்த ஆண்டிற்கான தகவல்கள் சில வருமாறு

ஆண்டின் போது கொள்வனவு 430 000 கடன்பட்டோரிடம் பெற்ற காசு 560 00/= மொத்த இலாப எல்லை கொள்விலையில் 30% 2012 நவம்பரில் தீ விபத்தில் எஞ்சிய பெறுமானம் 10 000/= . தீயினால் அழிவடைந்த சரக்கு யாது?

 

கணக்குகளை உரிய முறையில் அறிக்கைப்படுத்தாத வணிகமொன்றின் 2016.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2015.04.01 இல் இருப்பின் பெறுமதியாக இருப்பது,

 

பியசீலி வணிகத்தின் 2016 சனவரி மாதம் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களும் மேலதிகத் தகவல்களும் பின்வருமாறு

  • பொருட்களின் கடன் கொள்வனவு ரூபா 20 000 வாக இருந்ததுடன் இவற்றுள் ரூபா 15 000 பெறுமதியான பண்டங்கள் மாதத்தினுள் கடனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • அறவிடமுடியாக் கடன் பதிவழிப்பு ரூபா 3 000 ஆகும். கடந்த வருடத்தில் பதிவழிக்கப்பட்ட ரூபா 1 000 பெறுமதியான அறவிடமுடியாக்கடன் சனவரி மாதத்தினுள் மீளக் கிடைக்கப் பெற்றது.
  •  சனவரி மாதத்திற்கான கிடைத்த மின் பட்டியல் ரூபா 5 000 ஆகும். 2016 பெப்ரவரி 10 ஆம் திகதி அது
    செலுத்தப்பட்டது.
  • 2016 சனவரி மாதத்திற்குரிய சம்பளமான ரூபா 10 000 அம்மாதத்தினுள் செலுத்தப்படவில்லை என்பதுடன், 2015 டிசம்பர் மாதத்திற்குரிய சம்பளம் ரூபா 8 000 செலுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட வணிகத்தின் 2016 சனவரி மாதத்தில் வருமானத்திற்கெதிராக சீராக்க வேண்டிய மொத்தச் செலவுகள் எவ்வளவு?

 

வரையறுத்த துரைராஜா கம்பனி 01.04.2011இல் வணிகத்தை ஆரம்பித்தது. 31.03.2012 இலுள்ளவாறான பௌதிக இருப்புகளின் கிரயம் ரூபா 50 000 31.03.2012 வரையில் காலாவதியடைந்த உருப்படிகளின் கிரயம் ரூபா. 10 000 (இது பௌதிக இருப்புக்களில் உள்ளடக்கவில்லை. இவற்றை விநியோகத்தர்களுக்கு திருப்பி அனுப்ப முடியும்.)

31.03.2012 இல் முடிவடைந்த ஆண்டில் கடன்பட்டோரிடம் பெற்ற காசு ரூபா. 210 000
31.03.2012 இலுள்ளவாறான கடன்பட்டோர் ரூபா. 40 000
விநியோகத்தர்கட்கு செலுத்திய காசு ரூபா 150 000
விற்பனைக் கிரயத்தில் 25மூ மொத்த இலாபமாக எப்போதும் பேணப்படும் எல்லாக் கொள்வனவுகளும் விற்பனைகளும் கடனுக்கே மேற்கொள்ளப்படுகின்றன.

31.03.2012இல் விநியோகத்திலிருந்து செலுத்த வேண்டியுள்ள தொகை யாது?