வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றின் பங்குதாரர் உரிமையென்பது?
ஒதுக்கங்கள் கூறப்பட்ட மூலதனமாக மாற்றப்படும் போது கம்பனியின் பங்குதாரர்களால் அவர்களின் முழு உரிமைகளும் பாவிக்கப்படுமாயின் கம்பனியொன்றின் சொத்துக்களிலும் உரிமையாண்மையிலும் இம்மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் எது?
வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனி ஒன்றில் பிரசுர நிதிக் கூற்றுக்களின் கூறுகளாக அமைபவை
அமிலன் PLC இன் 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்துக்கான நிதிக் கூற்றுக்களானவை இயக்குனர்களினால் 30.06.2017 இல் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. 31.03.2017 தொடக்கம் 30.06.2017 வரையான காலப்பகுதியில் கம்பனியில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
A – 01.05.2017 இலிருந்து கம்பனியின் முதலீட்டின் சந்தைப் பெறுமதியானது தொடர்ச்சியாகக் குறைந்து செல்கிறது.
B – 01.03.2017 இல் கடனுக்குப் பொருட்களை வாங்கிய கடன்பட்டோர் ஒருவர் 19.05.2017 இல் நீதிமன்றத்தினால் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
C – 30.05.2017 இல் ஏற்பட்ட தீ விபத்தினால் 31.03.2017 இலிருந்து காணப்பட்ட இருப்புக்கள் அழிவடைந்துள்ளன.
D – கம்பனிக்குச் சொந்தமான 31.03.2017 இல் காணப்பட்ட நிலமொன்று வீதியொன்றை நிர்மாணிப்பதற்காகப் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கும் கடிதமொன்று 20.06.2017 இல் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டது.
மேற்கூறிய நிகழ்வுகளில் LKAS 10 (அறிக்கையிடற் காலத்துக்குப் பிந்திய நிகழ்வுகள்) இன்படி கம்பனியின் 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களில் சீராக்கம் செய்யத் தேவையற்ற நிகழ்வுகளாகக் கருதப்படும் நிகழ்வுகள் எவை?
LKAS 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்) இற்கு அமைய ஏற்பாடு ஒன்றை இனங்காண்பதில் திருப்திப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனை / நிபந்தனைகள் எது / எவை?
A – கடந்த கால நிகழ்வொன்றின் விளைவாக எழும் சட்டரீதியான அல்லது உறுதியான கடப்பாடு ஒன்றினை நிறுவனமானது நிகழ்காலத்தில் கொண்டிருத்தல்.
B – கடப்பாட்டினைத் தீர்ப்பதற்குப் பொருளாதார நன்மைகளைக் கொண்டு காணப்படும் வளங்களின் வெளிப் பாய்ச்சலுக்கான சாத்தியத் தன்மை காணப்படல்.
C – கடப்பாட்டிற்கான தொகை தொடர்பில் நம்பத்தகுந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள முடிதல்.
வரையறுத்த இந்திரா பொதுக் கம்பனியில் 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுகள் 15.06.2016 இல் இயக்குனர்களால் அதிகாரமளிக்கப்பட்டன. 31.03.2016 இலிருந்து 15.06.2016 வரையான காலப் பகுதிக்குள் கம்பனியில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
A – 15.04.2016 இலிருந்து வியாபாரத்தின் ஒரு பகுதியை நிறுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பினை விடுத்தல். இதனால் வருடாந்தம் ரூ. 600 000 ஐ சேமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
B – 20.04.2016 இல் பிரதான உற்பத்தி பொறி தீயினால் அழிக்கப்பட்டுள்ளது. அதனால் ரூ. 1 000 000 நட்டம்
ஏற்பட்டது.
C – 30.04.2016 இல் மேற்கொள்ளப்பட்ட கடன் விற்பனையினால் எழுந்த ரூ. 750 000 மீதியைக் கொண்ட
கடன்பட்டோரொருவர் 30.05.2016 இல் முறிவடைந்துள்ளார்.
D – 15.06.2016 இல் சாதாரண பங்குதாரர்களுக்கு ரூ. 300 000 இறுதி பங்கிலாபமாகப் பிரகடனப்படுத்தப்படல்.
LKAS 10 (அறிக்கையிடல் காலத்திற்குப் பின்னரான நிகழ்வுகள்) இதன்படி மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளில் எவை 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்தில் சீராக்கம் செய்யத் தேவையற்ற நிகழ்வுகள் எனக் கருதப்படும்?
இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் ‘நிதி அறிக்கையிட லுக்கான எண்ணக்கரு சட்டவாக்கத்தின் படி” பின்வருவனவற்றுள் எது நிதித் தகவல்களின் மேம்படுத்தும் பண்புசார் குணாதிசயங்களில் ஒன்று அல்ல?
LKAS 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்) இதற்கமைய கம்பனி ஒன்றின் நிதி நிலைமைக் கூற்றில் ஏற்பாடாக பின்வருவனவற்றுள் எது இனங்காணப்படும்?
A – ஐயக்கடனுக்கான ஏற்பாடு
B – ஊழியர்களினால் கோரப்படும் இழப்பீட்டுத் தொகையொன்றுக்கான ஏற்பாடு.
C – பெறுமானத் தேய்விற்கான ஏற்பாடு
D – உத்தரவாதக் கோரிக்கைக்கான ஏற்பாடு
அகிலன் PLC இன் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகள் கம்பனியின் இயக்குனர்களால் 15.05.2015 இல் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. கம்பனியின் வருடாந்த பொதுக் கூட்டமானது 30.05.2015 இல் இடம்பெற்றது. பின்வரும் நிகழ்வுகள் 31.03.2015 இற்குப் பின்னர் கம்பனியில் இடம்பெற்றுள்ளன.
A – 31.03.2015 இல் ரூ. 750 000 தரவேண்டிய கடன்பட்டோரொருவர் 20.04.2015 இல் முறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
B – 31.03.2015 இல் ரூ. 800 000 கிரயமுடைய சரக்கிருப்புகள் 30.04.2015 இல் ரூ. 720 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.
C – 31.03.2015 இல் கம்பனியின் பொறுப்பொன்றான ரூ. 500 000 இனை உறுதிப்படுத்தி 25.05.2015 இல் நீதிமன்ற வழக்கொன்றின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
D – 15.05.2015 இல் சாதாரண பங்கொன்றிற்கு ரூ. 3 இறுதிப் பங்கிலாபமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
கம்பனியின் 31.03.2015 இல் முடிவடையும் நிதிக் கூற்றுகளில் LKAS 10 (அறிக்கையிடல் காலத்திற்கு பின்னரான நிகழ்வுகள்) இன்படி மேலே காணப்படும் எந்த நிகழ்வுகள் சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.
பின்வருவனவற்றுள் எது இலங்கையில் பின்பற்றப்படும் ‘நிதி அறிக்கையிடலிற்கான எண்ணக்கரு சட்டவாக்கத்தின் படி” நிதித் தகவல்களின் அடிப்படை பண்புசார் குணாதிசயங்களாகக் கருதப்படுகின்றது?