30, 31 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
சாரதியொருவர் தனது வாகனத்தை அதிவேகப் பாதையில் 150 Km தூரத்தை 90 Km h−¹ சீரான வேகத்தில் செலுத்துவதற்கு எதிர்பார்த்தார். அவர் அதற்கமைய வாகனத்தை செலுத்தினாரெனினும் இடைவழியே சீரற்ற பாதை நிலைமை காரணமாக 15 Km தூரத்தை 75 Km h−¹ சீரான வேகத்தில் செலுத்த நேரிட்டது
சாரதி பயணத்திற்காக செலவழிப்பதற்கு எதிர்பார்த்த நேரம் எத்தனை நிமிடங்கள்?
28, 29 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
அனுர, பானு, காஸிம், டேவிட் ஆகிய நான்கு பிள்ளைகள் ஒரு வீட்டின் முன்புறத்திலுள்ள வீட்டுத்தோட்டத்தில் இறப்பர் பந்தொன்றைக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு பிள்ளை கவனமின்றி எறிந்த பந்து வீட்டின் யன்னலில் பட்டதால் யன்னற் கண்ணாடி உடைந்தது. யன்னற் கண்ணாடியை உடைத்தவர் யார் என்பது குறித்து அந்தப் பிள்ளைகள் கூறியவை வருமாறு,
✴ அனுர : அதனை உடைத்தவர் பானு.
✴ பானு : அனுர சொல்வது பொய்.
✴ காஸிம் : அதனை உடைத்தவர் அனுர.
✴ டேவிட் : அதனை உடைத்தவர் நான் அல்ல.
சரியாக இரண்டு பிள்ளைகள் உண்மை கூறுகின்றனர் எனின் யன்னற் கண்ணாடியை உடைத்தவர் யார்?
28, 29 ஆகிய வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
அனுர, பானு, காஸிம், டேவிட் ஆகிய நான்கு பிள்ளைகள் ஒரு வீட்டின் முன்புறத்திலுள்ள வீட்டுத்தோட்டத்தில் இறப்பர் பந்தொன்றைக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு பிள்ளை கவனமின்றி எறிந்த பந்து வீட்டின் யன்னலில் பட்டதால் யன்னற் கண்ணாடி உடைந்தது. யன்னற் கண்ணாடியை உடைத்தவர் யார் என்பது குறித்து அந்தப் பிள்ளைகள் கூறியவை வருமாறு,
✴ அனுர : அதனை உடைத்தவர் பானு.
✴ பானு : அனுர சொல்வது பொய்.
✴ காஸிம் : அதனை உடைத்தவர் அனுர.
✴ டேவிட் : அதனை உடைத்தவர் நான் அல்ல.
பிள்ளைகளுள் ஒருவர் மாத்திரமே உண்மை கூறுகின்றார் எனின் யன்னற் கண்ணாடியை உடைத்தவர் யார்?
26, 27 ஆகிய வினாக்கள் 2014 – 2018 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதியைக் காட்டும் பின்வரும் வரைபை அடிப்படையாகக் கொண்டவை.

2014 தொடக்கம் 2018 வரையிலான காலப்பகுதியில் இறக்குமதிகளின் இடை ஆண்டு வளர்ச்சி வீதம் அண்ணளவாக எவ்வளவு?
26, 27 ஆகிய வினாக்கள் 2014 – 2018 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதியைக் காட்டும் பின்வரும் வரைபை அடிப்படையாகக் கொண்டவை.

2014 தொடக்கம் 2018 வரையிலான காலப்பகுதியில் எத்தனை ஆண்டுகளில் இறக்குமதிப் பெறுமானமானது ஏற்றுமதிப் பெறுமானத்தின் 150% இலும் கூடுதலாகக் காணப்பட்டுள்ளது?
இக்கோலத்தின் இறுதிக் கட்டத்தில் வரவேண்டிய எண் யாது?
![]()
சித்திப் புள்ளி 20 ஆகவுள்ள சோதனையொன்றுக்கு ஐந்து மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள் அனைவரும் சோதனையில் சித்தியடைந்ததோடு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் கூட்டுத்தொகை 105 ஆகும். சோதனையில் உச்சப் புள்ளிகளைப் பெற்ற இரண்டு மாணவர்கள் இருப்பார்கள் எனின், அவ் உச்சப்புள்ளி எதுவாக இருக்க முடியும்?