45, 46 ஆகிய வினாக்களில், 1, 7 ஆகிய வாக்கியங்களுக்கு இடையே உள்ள A, B, C, D,E ஆகிய வாக்கியங்கள் சரியான ஒழுங்கில் தரப்பட்டவில்லை. ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியான ஒழுங்குமுறையை உருவாக்கப் பொருத்தமான வரிசைப்படுத்தலைத் தெரிவுசெய்க.

1 – தென்னை, பலா, கித்துள் போன்ற தால வர்க்கத் தாவரங்கள் இலங்கையில் வளர்கின்றன.
A – தெங்குப் பயிர்ச்செய்கைச் சபை அண்மையில் ‘உலர் வலய தென்னை முக்கோணம்” எனும் பெயரில் மற்றுமொரு தென்னை முக்கோணத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
B – நாட்டின் ஒட்டுமொத்த தென்னை பயிரிடும் நிலப்பரப்பின் 56% வடமேல் மாகாணத்திலும் (குருணாகல், புத்தளம் மாவட்டங்கள்) மேல் மாகாணத்தின் ஒரு பகுதியிலும் (கம்பஹா மாவட்டம்) அமைந்துள்ளது.
C – இது மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.
D – அப்பிரதேசம் ‘தென்னை முக்கோணம்” எனப்படுகிறது.
E – நாட்டின் சகல பகுதிகளிலும் தென்னைப் பயிர் காணப்பட்ட போதிலும் மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் தென்னை பயிரிடும் பிரதான பிரதேசங்கள் ஆகும்.
7 – நாட்டில் மொத்த தென்னைப் பயிர்ச்செய்கையைத் துரிதமாக விருத்தி செய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது.

 

 

45, 46 ஆகிய வினாக்களில், 1, 7 ஆகிய வாக்கியங்களுக்கு இடையே உள்ள A, B, C, D,E ஆகிய வாக்கியங்கள் சரியான ஒழுங்கில் தரப்பட்டவில்லை. ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியான ஒழுங்குமுறையை உருவாக்கப் பொருத்தமான வரிசைப்படுத்தலைத் தெரிவுசெய்க.

1 – இலங்கை அரசு கோவிட் – 19 பொருளாதார மீளெழுச்சி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சில
உற்பத்திகள் மீது விதித்திருந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அண்மையில் நீக்கியது.
A – அத்தோடு இறக்குமதிகள் மீது தங்கியிருப்பதைத் தவிர்ப்பதற்காக சுதேச வழங்கல்      சங்கிலிக்கு வலுவூட்டுவதற்கு அது துணையாக அமையும்.
B – ‘விவசாயம், சேவைகள் மற்றும் நிர்மாணங்கள் தொடர்பான வாகனங்கள் தவிர்ந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்துதல்” இது தொடர்பான வழிகாட்டல்களில் காட்டப்பட்டிருந்தது.
C – மோட்டார் வாகன இறக்குமதித் தடை மாற்றமின்றிக் காணப்பட்டது.
D – வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி காரணமாக உற்பத்திகளின் இறக்குமதி மீது     விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை முதல் தடவையாக இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே செயலுருப்படுத்தப்பட்டது.
E – நாட்டுப் பொருளாதார மீளெழுச்சித் திட்டமானது செலாவணி விகிதத்தை உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ளது.
7 – பொருளாதார மீளெழுச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுதேச உற்பத்திகளுக்கு ஊக்கமளிப்பதற்காக சில பண்டங்கள் மீது விசேட வியாபார வரி உயர்மட்டங்களில் பேணிவரப்படும்.