நிறுவனமொன்று 108 000 விற்பனை விலையில் (கிரயத்தில் 20% இலாபம் உள்ளடக்கியது) விற்பனையன்றேல் திருப்பி அனுப்புக என்ற அடிப்படையில் பொருட்களை அனுப்பியது. இதனை வருடத்திற்கான கடன் விற்பனையாக கணக்கிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் கணக்கிடப்பட்ட இலாபம் 120 000 ஆனால், ஆண்டு இறுதியில் இலாபம் கணக்கிடப்பட்ட பின்னர் அனுப்பப்பட்ட பொருட்களில் 50% மானவை விற்பனையாகவில்லை என்ற தகவல் கிடைத்தது. இவ்வருடத்திற்கான சரியான இலாபம் யாது?
31.03.2015இல் முடிவடைந்த கணக்காண்டில் தேறிய கொள்வனவு 60 000. இருப்பில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு 20 000. மொத்த இலாப வீதம் 20% ஆண்டுக்கான விற்பனை யாது?
31.03.2014இல் முடிவடையும் ஆண்டில் செலுத்திய வாடகை 5 600. 31.03.2013இல் முற்பணமும் 31.03.2014 இல்
நிலுவைகளும் முறையே 500/-, 400/-
31.03.2015 இல் வருமானக் கூற்றில் வெளிப்படுத்த வேண்டிய பெறுமானம் யாது?
01.01.2014இல் கடன்படுனர் மீதி 120 000. ஐயக்கடன் ஏற்பாட்டு மீதி 9 600. 31.12.2014இல் கடன்பட்டோர் மீதி 150 000. இவ்வாண்டு பதிவளிக்கப்பட்ட அறவிடமுடியாத கடன் 2 000. மீளப்பெற்ற அறவிட முடியாக் கடன் 3 000. வருடம் தோறும் ஒரே வீதத்தையே அறவிடமுடியாத ஐயக்கடனுக்காக ஏற்பாடு பின்பற்றுவது வழமையாகும். 31.12.2014 ஆம் ஆண்டு வருமானக் கூற்றில் வெளிப்படுத்த வேண்டிய தொகை யாது?
01.01.2015 இல் கடன்பட்டோர் மீதி 5 000. ஐயக்கடன் ஏற்பாட்டு கணக்கு மீதி 1 500. இவ்வாண்டு கடன் விற்பனைகள் 20 000. உட்திருப்பம் 2 000. கடன்பட்டோரிடம் பெற்ற காசு 4 800. கொடுத்த கழிவு 200. அறவிடமுடியாக் கடன் பதிவளித்தல் 500. ஐயக்கடன் ஏற்பாடு 3% ஆகும். அறவிடமுடியாக் ஐயக்கடன் கணக்கின் மூலம் இலாப நட்டக் கணக்கில் தாக்கல் செய்யும் தொகை யாது?
01.01.2014 ஐயக்கடன் ஏற்பாட்டு மீதி : 4 000. 31.12.2014 இல் கடன்பட்டோர் மீதி 20 000. ஐயக்கடனாக இருந்து 2013இல் பதிவளிக்கப்பட்ட அறவிட முடியாத கடன் 1300. இலாப நட்டக் கணக்கிலிருந்து ஐயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கிற்கு கொண்டு வரப்பட்ட தொகை 1 700. ஆண்டுக்குரிய ஐயக்கடன் ஏற்பாடு கடன்பட்டோரில் என்ன வீதமாகவிருக்கும்?
நடப்பாண்டில் பதிவளிக்கப்பட்ட அறவிட முடியாக் கடன் நடப்பாண்டில் மீளப்பெறப்பட்டால் பதிவு
தனிவியாபாரியொருவரின் தேறிய சொத்தின் பெறுமதி ஓர் நிதியாண்டின் இறுதியில் ரூபா 150 000ல் குறைவடைந்தது. ஆனால் இவ் ஆண்டில் வணிகம் உழைத்த தேறிய இலாபம் ரூபா 50 000 ஆக இருந்தது. உரிமையாளர் இவ் ஆண்டில் மேலதிக மூலதனமாக ரூபா 100 000 வழங்கியிருந்தார். உரிமையாளர் இவ் ஆண்டில் பற்றிய தொகை யாது?
நிறுவனம் ஒன்றில் உள்ள சொத்து பொறுப்பு விபரம் சில வருமாறு :

கடன்கொடுனருக்கு செலுத்திய காசு ரூ. 283 000 ஆகும். பண்டங்கள் கிரயத்தில் 25% இலாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டால் வருமானக் கூற்றில் 31.03.2014 முடிவுற்ற ஆண்டுக்கு பதிவு செய்யப்படும் விற்பனையும் மொத்த இலாபமும் முறையே

31.03.2015 இல் மொத்தப் பொறுப்பு?