உற்பத்திப் பொருளொன்றின் மொத்தக் கிரயமானது பின்வருவனவற்றுள் எவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்?

 

உற்பத்தி நிறுவனமொன்றின் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான சம்பளப் பட்டியலிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

கம்பனியின் 31.03.2015 இல் முடிவடையும் ஆண்டுக்கான நேர்க் கூலிகள் மற்றும் உற்பத்தி மேந்தலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சம்பளங்கள் ஆகியவற்றின் தொகைகள் எவை?

 

கம்பனியொன்றின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அலகொன்றுக்கு ரூ.10 வீதம் கூலி செலுத்தப்படுகிறது. 8 மணித்தியாலங்களைக் கொண்ட வேலை நாளொன்றில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 10 அலகுகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். எதிர்பார்க்கப்படும் தொகையை விட மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் அலகுகளுக்கு அலகொன்றுக்கு ரூ. 15 வீதம் செலுத்தப்படும். குறிப்பிட்ட நாளொன்றில் மூன்று ஊழியர்களான அமலன், விமலன், கமலன் ஆகியோர் முறையே 160, 200, 150 அலகுகளை உற்பத்தி செய்திருப்பின் அவர்களின் மொத்தக் கூலிகள் :

 

பின்வரும் தகவல்கள் வருடமொன்றில் உற்பத்திக் கம்பனியொன்றினால் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் “A” தொடர்பானவை.

விநியோகக் காலம் (மாதங்கள்) 4 6
ஆகக் கூடிய சரக்கிருப்பு மட்டம் 42 000 அலகுகள் ஆகும்.
இம்மூலப்பொருளின் மறுகட்டளை மட்டம், மறு கட்டளைத் தொகை என்பன:

 

நில அளவையாளர் ஒருவர் சதுரவடிவான காணித்துண்டொன்றின் ஒருபக்க நீளத்தை அளக்கும் போது சரியான பெறுமானத்திலும் 3% கூடுதலாக அமையுமாறு வழுவுடன் கூடிய அளவீடொன்றைப் பெற்றார். பின்னர், அப்பெறுமானத்தைப் பயன்படுத்தி, அவர் சதுரக் காணித்துண்டின் பரப்பளவைக் கணித்தார். அப்பரப்பளவுக் கணித்தலின் சதவீத வழு எவ்வளவு?

 

கீழே தரப்பட்டுள்ள A, B, C, D, E ஆகிய ஒவ்வொரு பந்தியும் மூன்று வாக்கியங்களைக் கொண்டது. பொருளுள்ளவாறு ஒழுங்குமுறைப்படி வரிசைப்படுத்தக்கூடிய வாக்கியங்கள் அடங்கிய பந்தி அவற்றுள் எது?

A (a) ஒரு வருடத்தில் இரண்டு மழைக்காலங்கள் உள்ளன.
(b) ஒக்டோபர் தொடக்கம் டிசெம்பர் வரையிலான காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி       கிடைப்பதோடு, மார்ச் தொடக்கம் மே வரையிலான காலத்தில் குறைந்தளவான மழை கிடைக்கின்றது.
(c) அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் நீர்நிலைகள், அணைகள் அனைத்திலும் நீர்  நிரம்பியிருக்கும்.

B (a) டிசெம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையிலான ஒரு காலத்தில் மாத்திரம் பனை மரங்களில் பூக்கள் மலரும்.
(b) பெப்ரவரி தொடக்கம் யூன் வரையிலும், செப்ரெம்பர் தொடக்கம் நவம்பர் வரையிலுமான காலங்களிலும் ஆண்டில் இரண்டு தடவைகள் மரமுந்திரிகை மரங்களில் பூக்கள் மலரும்.
(c) தென்னை மரங்களில் ஆண்டு முழுவதும் பூக்கள் மலரும்.

C (a) ரோய், விளையாட்டில் கெட்டிகாரனாவதோடு பாடசாலையில் உள்ள அனைவரிடத்திலும்
பிரபல்யமானவனாவான்.
(b) ரம்யா பாடசாலையில் பேச்சிலும், நாடகத்திலும் கற்றல் நடவடிக்கைகளிலும் திறமையானவளாவாள்.
(c) அதிபரும் பாடசாலை ஒழுக்காற்று குழுவினரும் இணைந்து ரோய், ரம்யா ஆகிய இருவரையும் பாடசாலை மாணவத் தலைவர்களாக நியமிக்குமாறு விதந்துரைத்தனர்.

D (a) லக்ஷ்மி நீர்ப்பாத்திரமொன்றை ஏந்திச்சென்ற போது மயக்கமடைந்து கீழே விழுந்தாள்.
(b) லக்ஷ்மி இடையிடையே தலைவலியால் அவதியுறுபவள்.
(c) லக்ஷ்மி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள்.

E (a) வங்கிகள், தனி எண் குறியீட்டினால் காட்டப்படும் மட்டத்தில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தின் கீழ் வீட்டுக் கடன் வழங்குகின்றன.
(b) அரசானது வங்கிகளில் நிலையான வைப்புகளுக்கான மற்றும் சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை தனி எண் குறியீட்டு மட்டம் வரை குறைத்துள்ளது.
(c) வட்டி விகிதங்களை குறைப்பதன் நோக்கம், சகல பிரஜைகளுக்கும் வீட்டுக்கடன் வழங்கும் அரச கொள்கைக்கு ஆதரவளித்தலாகும்.