கம்பனியொன்று பெறுமானத்தேய்வு முறையினை நேர்கோட்டு முறையிலிருந்து குறைந்த செல்மீதி முறைக்கு நடைமுறையாண்டில் மாற்றியுள்ளது. மேற்கூறிய மாற்றத்தை சீராக்க வேண்டியது எதில்?

 

2011.03.31 இல் முடிவடைந்த நிதிக் கூற்றுகளில் கம்பனியொன்றின் இயக்குனர்கள் 2011.06.30 இல்
கையொப்பமிட்டுள்ளனர். நிதிக்கூற்றுக்கள் 2011.07.15 இல் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில்
பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டது. கீழ்வரும் நிகழ்வுகள் தொடர்பில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
A – வெள்ளம் காரணமாக 2011.05.20 இல் ரூ. 250 000 பெறுமதியான அலுவலக உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
B – 2009 இல் வாடிக்கையாளர் ஒருவரினால் கம்பனிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பில் 2011.06.15 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத் தீர்ப்பு ரூ. 150 000 இழப்பீட்டு பொறுப்பினை கம்பனிக்கு ஏற்படுத்தியுள்ளது.
C – 2011.03.31 இல் ரூ. 300 000 மீதியினை கொண்டுள்ள வாடிக்கையாளர் ஒருவர் 2011.07.05 இல் முறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். கம்பனியானது ஐந்தொகை தினத்தன்று இத்தொகைக்கான முழு ஏற்பாட்டையும் ஏற்கனவே செய்திருந்தது.

மேலுள்ள நிகழ்வுகளில் எவைகளுக்கு 2011.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் தேவைப்படுகிறது?

 

நிதி அறிக்கையிடலிற்காக எண்ணக்கரு சட்டகத்தினை (conceptual frame work) விருத்தி செய்வதற்குரிய காரணங்கள் பின்வருவனவற்றுள் எது?
A – கணக்கீட்டு நியமங்களை விருத்தி செய்வதற்கான அடிப்படையை வழங்குவதற்கு
B – நிதிக் கூற்றுகளைப் பயன்படுத்துவோர் அதனை சிறந்த முறையில் விளங்கிக்கொள்ள உதவுவதற்கு
C – பொருத்தமான கணக்கீட்டு நியமங்கள் இல்லாத நிலையில் நிதிக்கூற்றுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு
D – நிதித் தகவல்களின் தரத்தினை உயர்த்துவதற்கான கோட்பாட்டு அடிப்படையை வழங்குவதற்கு

 

கம்பனியொன்றின் வருடாந்த பொதுக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுகள் தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

 

நிறுவனமொன்றின் குறிப்பிட்ட காலத்திற்கான நிதி நிலைமையில் ஏற்படும் மாற்றத்தினைப் பின்வருவனவற்றில் எது காட்டுகின்றது?

 

இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இற்கமைய கணக்கீட்டு கொள்கைகளின் தெரிவு, அதன் பிரயோகம் தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
A – நிறுவனமானது தெரிவு செய்யப்பட்ட கணக்கீட்டு கொள்கைகளைத் தொடர்ந்தும் பிரயோகிக்க வேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது.
B – கொடுக்கல் வாங்கல் ஒன்றிற்குக் கணக்கீட்டு நியமம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் முகாமையானது கணக்கீட்டுக் கொள்கைகளைத் தெரிவு செய்வதில் தமது தீர்மானங்களை எடுக்கலாம்.
C – நிறுவனத்தின் கணக்கீட்டு கொள்கைகளை வெளிப்படுத்தல் அத்தியாவசியமானது அல்ல.

 

வரையறுத்த களனிய பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2010 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுகளை 17 மே 2010 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 1 யூன் 2010 இல் மீளாய்வு செய்து 10 யூன் 2010 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 22 யூலை 2010 இல் பங்குதாரர்களுக்கு
கிடைக்கக்கூடியதாக விடப்பட்டுள்ளதுடன் பங்குதாரர்கள் 25 யூலை 2010 இல் அவைகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இன் படி களனிய வரையறுத்த பொதுக் கம்பனியின் ஐந்தொகை தினத்திற்குப் (DATE) பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்குப் பிரயோகிக்கக் கூடிய கால எல்லை எது?

 

இலங்கைக் கணக்கீட்டு நியமம் 37 இற்கமைய ஏற்பாடு ஒன்றினை இனங்கண்டு கொள்வதற்குப் பின்வருவனவற்றுள் எவற்றைத் திருப்திப்படுத்தல் வேண்டும்?
A – முன்னைய நிகழ்வொன்றின் விளைவாக நிறுவனமொன்று நிகழ்கால கடப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும்.
B – பொருளாதார நன்மைகளின் சாத்தியமான வெளிப்பாய்ச்சல் இருத்தல் வேண்டும்.
C – தொகையானது நம்பகமான முறையில் அளவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

 

கீழே தரப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களின் பகுதி / பகுதிகளில் எது / எவை குறித்த தினத்தில் தயாரிக்கப்படுகின்றது?

A – ஐந்தொகை
B – வருமானக் கூற்று
C – உரிமையாண்மை மாற்றத்திற்கான கூற்று
D – காசுப் பாய்ச்சல் கூற்று

 

பின்வருவனவற்றுள் எது சொத்தொன்றின் இன்றியமையாத பண்பாகும்?