உற்பத்திப் பொருளொன்றின் உற்பத்திக் கிரயம் பின்வருவனவற்றுள் எதற்குச் சமனானது?

 

பொருளொன்றின் அலகொன்றிற்கான நேர்மூலப் பொருள், ஊழியக் கிரயம் ஆகியவற்றின் மொத்தம் ரூ. 160. பொருள் ஒன்றிற்கான உற்பத்தி இறை ரூ. 50 செலுத்தப்படல் வேண்டும். பொருளின் அலகொன்றினை உற்பத்தி செய்வதற்கு ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட நேரம், முன்னரே
தீர்மானிக்கப்பட்ட மேந்தலை உறிஞ்சல் வீதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இப்பொருளின் அலகொன்றிற்கான கிரயம் யாது?

 

கம்பனியொன்று மேந்தலைகளை உறிஞ்சுவதற்கு இயந்திர மணித்தியால வீதத்தைப் பயன்படுத்துகிறது. பாதீடு செய்யப்பட்ட இயந்திர மணித்தியாலங்கள், மேந்தலைகள் முறையே 15 000, ரூ. 300 000 ஆகும். இவ் இயந்திரமானது 20 000 மணித்தியாலங்கள் வேலை செய்துள்ளது. உண்மையாக ஏற்பட்ட உற்பத்தி மேந்தலைகள் ரூ. 360 000 ஆகும். மேலதிக / (குறைவு) மேந்தலை உறிஞ்சல் எது?

 

பின்வரும் சமன்பாடுகளில் எது மொத்தக் கிரயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை?

 

உற்பத்தி மேந்தலைகள் நேர் ஊழிய மணித்தியால அடிப்படையில் உறிஞ்சப்பட்டிருப்பின் பின்வரும் தகவல்களின் படி எல்லா உற்பத்திப் பொருட்களாலும் உறிஞ்சப்படும் மொத்த மேந்தலை எது?

 

கணக்கீட்டு மதிப்பீடுகள் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை?
A – அவைகள் குறிப்பிட்ட எடுகோள்களின் அடிப்படையிலானவை.
B – அவைகள் நிதிக் கூற்றுக்களின் பண்புசார் குணாதிசயங்களைக் குறைக்கின்றன.
C – புதிய தகவல்கள் காரணமாக அவைகள் மாற்றமடைகின்றன.
D – அவைகள் நிதிக் கூற்றுகளைத் தயாரிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் தேவையானவை.

 

முகாமைக் கணக்கீடு தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
A – இது நிறுவனமொன்றின் முகாமை தகவல் முறைமையின் ஒரு பகுதியாகும்.
B – இது நிறுவனமொன்றின் செயற்பாடுகளைத் திட்டமிடவும் கட்டுப்படுத்தவும் முகாமையாளர்களால்
பயன்படுத்தப்படுகிறது.
C – இது முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வெளியாட்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது.

 

கிரயங்களை சேகரித்தல், ஒதுக்குதல், கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பான கணக்கீட்டு தொழிற்பாடு பின்வருவனவற்றுள் எதனால் கண்டறியப்படும்?

 

கிரய அலகானது உற்பத்திப் பொருள் ஒன்றாக இருப்பின் பின்வருவனவற்றுள் எதை / எவற்றை நேர் மூலப் பொருட்களாக வகைப்படுத்தலாம்?
A – இரும்புக் கட்டைகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய உலோகம்
B – உற்பத்தியில் ஈடுபடுத்திய இயந்திரத்திற்குப் பயன்படுத்திய எண்ணெய்கள்
C – கணிப்பான்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய பிளாஸ்டிக்

 

பின்வருவனவற்றுள் எது உற்பத்திக் கிரயம் அல்லாதது?