ஒரு மாணவன் கணித பாடச் சோதனையொன்றில் 45 புள்ளிகள் பெற்றான். எனினும் அது புள்ளிப் பட்டியலில் 75 எனத் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அத்தவறை திருத்திய பின்னர் கணித பாடச் சோதனைக்காக வகுப்பின் சராசரிப் (இடை) புள்ளி 1.5 இனால் குறைவடைந்தது. அக்கணித பாடச் சோதனைக்கு தோற்றிய மாணவர் எண்ணிக்கை யாது?
பயன்படுத்திய மோட்டார் வாகனமொன்றை ரூபா 3.2 மில்லியனுக்கு வாங்கிய மோட்டார் வாகன கராஜ் உரிமையாளர் ஒருவர் ரூபா 800 000 செலவு செய்து அதனைப் பழுதுபார்த்து ரூபா 4.8 மில்லியனுக்கு விற்றார். அவர் பெற்ற இலாபச் சதவீதம் யாது?
ராஜன் 4.5% வருடாந்த எளிய வட்டி வீதத்தில் ரூபா. 3240 இனை முதலீடு செய்தார். வட்டியாக ரூ. 729 ராஜாவுக்கு கிடைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
2022 இல் சீனாவில் ஹன்ஷொன் நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவின் விளையாட்டு நிகழ்ச்சி நிரலில், பின்வரும் எந்த விளையாட்டை மீள அறிமுகஞ் செய்வதென ஆசிய ஒலிம்பிக் சபை தீர்மானித்துள்ளது?
சந்தையில் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட சில பால்மா வகைகளில் பின்வரும் எந்த குறித்த இரசாயனச் சேர்வை அடங்கியுள்ளதாக அண்மைக் காலத்தில் சர்ச்சை ஏற்பட்டது. அவ் இரசாயனச் சேர்வை,
2018 ஆம் ஆண்டு இலங்கைத் தேயிலையை மிகக் கூடுதலான அளவில் கொள்வனவு செய்த நாடு எது?