25, 26 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக்
கொண்டவை.அம்பகாமம், தம்பகாமம் என்பன ஓர் ஆற்றினால் வேறாக்கப்பட்டுள்ள இரண்டு உப நகரங்களாகும். இந்த இரண்டு உப நகரங்களையும் இணைக்கும் பாதை 4 km நீளமானது. அதன் நடுவே பாலம் ஒன்று உள்ளது. இப்பாதையில், பாலத்தின் மீது 20 km h —¹ எனவும் பாலம் தவிர்ந்த ஏனைய இடங்களில் 60 km h —¹ எனவும் கதி எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாகனமொன்று, மொத்தப் பயணத்தையும் ஒரே சீரான கதியில் செல்ல எதிர்பார்க்குமாயின், அது அம்பகாமத்திலிருந்து தம்பகாமம் வரை செல்வதற்கு எடுக்கும் ஆகக் குறைந்த நேரம் எவ்வளவு?
ஒரே மாறா வீதத்தில் தொழிற்படும் சர்வசமனான எட்டுப் பொறிகளினால் ஒரு நிமிடத்தில் 280 பொருட்களை உற்பத்தி செய்யலாம். அதே வீதத்தில் தொழிற்படுகின்ற அதே வகையைச் சேர்ந்த 15 பொறிகளால் 6 நிமிடத்தில் அவ்வகையான எத்தனை பொருட்களை உற்பத்தி செய்யலாம்?
1958 இல் பிறந்த திரு. சீலன் 2022 இல் அவரது புதல்வனாகிய நாதனை விட இரண்டு மடங்கு வயதுடையவராக இருப்பார். நாதனின் தற்போதைய வயது யாது?