பேர்ச் ஒன்றில் ரூ. 8 000 வீதம் இலாபம் ஈட்டக்கூடியவாறு விற்பனை செய்யும் நோக்கில் திரு. நாதன் காணித்துண்டொன்றினை கொள்வனவு செய்தார். இக்காணிக்கு ஒரு பேர்ச்சுக்கு ரூ. 34 000 வீதம் செலுத்த விரும்பும் கொள்வனவாளர் ஒருவர் உள்ளாரெனினும், அது திரு. நாதன் ஒரு பேர்ச்சுக்குச் செலுத்திய தொகையிலும் 15% குறைவானதாகும். திரு.நாதன் ஒரு பேர்ச் காணிக்காக எதிர்பார்க்கும் பணத்தொகை யாது?
அருண் ஒரு தொகைப் பணத்தை, முதலிரண்டு வருடங்களில் ஆண்டுக்கு 6% உம் அடுத்த மூன்று வருடங்களில் ஆண்டுக்கு 5% உம் ஐந்து வருடங்களின் பின்னர் ஆண்டுக்கு 4% உம் என்ற எளிய வட்டி விகிதத்தின் கீழ் கடனாகப் பெற்றார். 10 வருடங்களின் பின்னர் அவர் செலுத்திய மொத்த வட்டிப்பணம் ரூ. 11 750 எனின், அவர் கடனாகப் பெற்ற பணத்தொகை எவ்வளவு?
மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் 200 மீற்றர் நீளமான ஒரு புகையிரதம், ஒரு சுரங்கத்தைக் கடப்பதற்கு 30 செக்கன் எடுத்தது. சுரங்கத்தின் நீளம் எத்தனை மீற்றர்?
50 ஓவர் கிரிக்கற் போட்டியொன்றின் வெற்றி இலக்கு 309 ஓட்டங்களாகும். 10 ஆம் ஓவர் முடிவில் ஓட்டம் பெறும் வேகம் 4.5 ஆக இருந்தது. எஞ்சியுள்ள 40 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஓட்டம் பெறும் வேகம் எவ்வளவு?
2019 ஆம் ஆண்டில் பரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் பிரசித்திப் பெற்ற தேவாலயமொன்று தீப்பற்றியதால் அதிக இழப்பு ஏற்றப்பட்டது. அத்தேவாலயத்தின் பெயர் யாது?
2020 சனவரி மாதத்தில் விசேட சூரிய கிரகணமொன்று இலங்கைக்குக் காட்சியளித்தது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இவ்வாறான அடுத்த சூரிய கிரகணம் 2031 மே மாதத்திலேயே இலங்கைக்குக் காட்சி தரும். அச்சூரிய கிரகண வகை எது?
இந்தியப் பாராளுமன்றம் தமது அயல் நாடுகள் மூன்றிலிருந்து வருகைதந்த சிறுபான்மைச் சமயப் புலம் பெயர்வோருக்காக இந்திய குடியுரிமை வழங்கும் சட்டமொன்றினை 2019 திசெம்பர் மாதத்தில் நிறைவேற்றியது. அம்மூன்று நாடுகளும் யாவை?