இக்கோலத்தின் இறுதிக் கட்டத்தில் வரவேண்டிய எண் யாது?
![]()
சித்திப் புள்ளி 20 ஆகவுள்ள சோதனையொன்றுக்கு ஐந்து மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள் அனைவரும் சோதனையில் சித்தியடைந்ததோடு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் கூட்டுத்தொகை 105 ஆகும். சோதனையில் உச்சப் புள்ளிகளைப் பெற்ற இரண்டு மாணவர்கள் இருப்பார்கள் எனின், அவ் உச்சப்புள்ளி எதுவாக இருக்க முடியும்?
சாந்தி 2020 பெப்ரவரி 29 ஆந் திகதி சனிக்கிழமை பிறந்தார். மீண்டும் அவரது பிறந்த நாள் பெப்ரவரி 29 சனிக்கிழமையாக அமையக்கூடிய மிகக்கிட்டிய ஆண்டு எது?
செவ்வகமொன்றின் நீளம் 25% இனால் குறைக்கப்படுவதோடு அதன் அகலம் 50% இனால் அதிகரிக்கப்படுகின்றது. அச்செவ்வகத்தின் பரப்பளவில் ஏற்படும் மாற்றம் சதவீதத்தில் எவ்வளவாகும்?
10 பிள்ளைகளைக் கொண்ட ஒரு குழுவில் மிக இளையவரின் வயது 8 வருடங்களாவதோடு மிக மூத்தவரின் வயது 16 வருடங்கள் ஆகும். இப்பிள்ளைகளது வயதுகளின் கூட்டுத்தொகை 120 வருடங்கள் எனின் 12 வருடத்துக்கும் 16 வருடத்திற்கும் இடைப்பட்ட வயதுடைய குறைந்தபட்ச பிள்ளைகளின் எண்ணிக்கை யாது?