45, 46 ஆகிய வினாக்களில், 1, 7 ஆகிய வாக்கியங்களுக்கு இடையே உள்ள A, B, C, D,E ஆகிய வாக்கியங்கள் சரியான ஒழுங்கில் தரப்பட்டவில்லை. ஏழு வாக்கியங்களுக்கும் இடையே தருக்கரீதியான ஒழுங்குமுறையை உருவாக்கப் பொருத்தமான வரிசைப்படுத்தலைத் தெரிவுசெய்க.

1 – இலங்கை அரசு கோவிட் – 19 பொருளாதார மீளெழுச்சி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சில
உற்பத்திகள் மீது விதித்திருந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அண்மையில் நீக்கியது.
A – அத்தோடு இறக்குமதிகள் மீது தங்கியிருப்பதைத் தவிர்ப்பதற்காக சுதேச வழங்கல்      சங்கிலிக்கு வலுவூட்டுவதற்கு அது துணையாக அமையும்.
B – ‘விவசாயம், சேவைகள் மற்றும் நிர்மாணங்கள் தொடர்பான வாகனங்கள் தவிர்ந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்துதல்” இது தொடர்பான வழிகாட்டல்களில் காட்டப்பட்டிருந்தது.
C – மோட்டார் வாகன இறக்குமதித் தடை மாற்றமின்றிக் காணப்பட்டது.
D – வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடி காரணமாக உற்பத்திகளின் இறக்குமதி மீது     விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை முதல் தடவையாக இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே செயலுருப்படுத்தப்பட்டது.
E – நாட்டுப் பொருளாதார மீளெழுச்சித் திட்டமானது செலாவணி விகிதத்தை உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ளது.
7 – பொருளாதார மீளெழுச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுதேச உற்பத்திகளுக்கு ஊக்கமளிப்பதற்காக சில பண்டங்கள் மீது விசேட வியாபார வரி உயர்மட்டங்களில் பேணிவரப்படும்.

 

36, 37, 38 ஆகிய வினாக்கள் பின்வரும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை.

ஒரு குறித்த ஆண்டில் க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சையில் வணிகப் பாடத்துறையில் நாட்டின் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் முறையே யாழ்ப்பாணம், காலி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். அம்மாணவர் ஐவரின் பெயர்கள் A, B, C, D, E,  ஆகும். அவர்கள் தெரிவுசெய்த பட்டக் கற்கைநெறிகளாவன கணக்கீடு, சந்தைப்படுத்தல், நிதியியல், வணிகவியல், வங்கியியல் ஆகியன ஆகும். எனினும் இவை எவ்வகையிலும் அதே ஒழுங்குமுறைப்படி தரப்படவில்லை.

✴ முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் வணிகவியல் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ வங்கியியல் பட்டத்தை தெரிவுசெய்த மாணவன் பெற்ற இடம் வணிகவியல் பட்டத்தையும்
சந்தைப்படுத்தல் பட்டத்தையும் தெரிவுசெய்த மாணவர் பெற்ற இடங்களுக்கு இடைப்பட்டது.
✴ ஐந்தாம் இடத்தைப் பெற்ற மாணவன் நிதியியல் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ கம்பஹா மாவட்ட மாணவன் கணக்கீட்டுப் பட்டத்தைத் தெரிவுசெய்தார்.
✴ A, D ஆகியோர் அடுத்தடுத்த இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.
✴ E சந்தைப்படுத்தல் பட்டத்தைத் தெரிவுசெய்துள்ளார்.
✴ B பெற்ற இடம், C இனதும் E இனதும் இடங்களுக்கு இடைப்பட்டது.
✴ D பெற்ற இடம் 5 ஆகும்.

காலி மாவட்ட மாணவன் கற்கைக்காக தெரிவுசெய்த பட்டம் யாது?