அக்மல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் உருக்கு கூர்த்தலையையும் மரக்கைப்பிடியையும் கொண்ட கோடரி ஒன்றினைக் கொள்வனவு செய்தான். அவன் ஒவ்வொரு எட்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூர்த்தலையையும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை அதன் கைப்பிடியையும் மாற்றினான். முதன்முதலாக கோடரியைக் கொள்வனவு செய்த பின்னர், எத்தனை தடவைகள், புதிய கோடரியொன்றின் உரிமையாளராகும் பாக்கியத்தை அவன் அனுபவித்துள்ளான்?

 

வன்மை, பாயும் தன்மை, சூடு ஆகிய மூன்று இயல்புகளுள் மிகக் கூடுதலான இயல்புகளைக் கொண்ட பொருள் பின்வருவற்றுள் எது?

 

நான்கு வருடங்களுக்கு முன்னர் திரு. பர்னாந்து, அவரது மனைவி, அவர்களது மகள் ஆகியோரின் சராசரி வயது 25 வருடங்களாக இருந்ததோடு, ஆறு வருடங்களின் முன்னர், திருமதி. பர்னாந்து அவரது மகள் ஆகியோரின் சராசரி வயது 22 வருடங்களாக இருந்தது. திரு. பர்னாந்துவின் தற்போதைய வயது என்ன?

 

அசித்த, 45 மாணவர்கள் உள்ள அவனது வகுப்பில் கணித பாடச் சோதனையின் சராசரிப்புள்ளி 52
எனக் கணித்தான். எனினும் சராசரிப்புள்ளியைக் கணிப்பதற்காக அசித்த பயன்படுத்திய புள்ளிகளுக்கு இடையே 81, 72, 63 ஆகிய சரியான மூன்று புள்ளிகளுக்குப் பதிலாக முறையே 18, 27, 36 என தவறான மூன்று புள்ளிகள் பதிவு செய்யப்பட்டமையை ஆசிரியர் கண்டறிந்தார். இக்கணித சோதனையின் சரியான
சராசரிப்புள்ளி எவ்வளவு?

 

 

பானவகையொன்றை தயாரிப்பதற்கு A வகைச் சாறும் B வகைச் சாறும் முறையே 4 : 3 விகிதத்தில் பாத்திரமொன்றினுள் கலக்கப்பட்டன. அப்பாத்திரத்திலிருந்து, பருகுவதற்காக 7 லீற்றர் பானம் எடுக்கப்பட்ட பின்னர், A வகைச் சாறுக்கும் B வகைச் சாறுக்கும் இடையிலான விகிதம் 4 : 5 ஆகுமாறு B வகையைச் சேர்ந்த சாறு 7 லீற்றர் அப்பாத்திரத்தில் சேர்க்கப்பட்டது. பாத்திரத்தினுள் ஆரம்பத்தில் A வகைச் சாறு எத்தனை லீற்றர் பயன்படுத்தப்பட்டது?